உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இசைத்தமிழ்க் கலம்பகம்

3

சிந்துவெனும் ஆற்றுவெளி சேர்ந்த வேத ஆரியரால் இந்துவென நாவலம் பொழில் ஏற்றது பெயரே

ஏற்றது பெயரே – மதம்

மேற்றதுந் துயரே

4

செந்தமிழ மதமிரண்டு சிவனியம் மாலியமே என்று சீரறு நான்முகனை யவற்றில் சேர்த்ததே யிந்து

சேர்த்ததே யிந்து - அதைத்

தீர்த்தலே நன்று

5

நான்முகனைத் தமிழமக்கள் நம்பினதே யிலை வழக்கில்

நாடும் வழிபாடவனுக்கு நடப்ப தில்லையே

நடப்ப தில்லையே - கதை

தொடுக்கும் சில்லையே

6

சிவநெறியும் மால்நெறியும் சேர்வதில்லாத் தனிநெறிகள் சிவனெனவே மாலும் முத்தொழில் செய்வன் என்பாரே செய்வன் என்பாரே - அதன் மெய்ம்மையும் பாரே

7

முத்திரு மேனியர் முறையே முத்தொழிலர் எனுந்துறையே வைத்ததினால் பெரியன் யாரென வழக்கு மூண்டதே

வழக்கு மூண்டதே பெருஞ்

சழக்கு நீண்டதே

8

இருதமிழ மதமும் இந்து என்றாரியம் ஏய்க்கும் வந்து

என்மதமே சிவனியம் அன்றேல் மாலியம் என்பாய்

(இந்து)

(இந்து)

(இந்து)

(இந்து)

(இந்து)

மாலியம் என்பாய்

அதே

மாயவம் முன்பாய்

(இந்து)