உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

உ.1

இமையவர் மொழியென் றேமாற்றி யின்றும் இம்மியும் விளங்காஅயன் மொழியே சமயமுஞ் சாராச் சடங்கொடு குழறிச்

சழக்குறும் அயல்வழியே ஒழியே

2

கணவனைத் தொழுதே காலையில் எழும்பும்

கற்புடை மகளிற்மயல் வழியே

மணமுதல் முந்நாள் மதிமுதல் மூவர்

மருவுக வெனும்பழியே ஒழியே

3

குலமென்ப தொன்றே கும்பிடுந் தெய்வக்

கொள்கையும் ஒன்றேஅக லிடத்தே

குலவிய காதல் கூடியக் கண்ணே

குருவனும் அயலான இடத்தும்

இசைத்தமிழ்க் கலம்பகம்

(தமிழிலே)

(தமிழிலே)

(தமிழிலே)

68. தமிழன் முன்னேறும் வழி

'மேரே மௌலாபுலா' என்ற மெட்டு

முன்னேறும் வழியே முத்தமிழ் மொழியே இன்னேகண் விழியே எத்துகை ஒழியே.

முத்தமிழ வேந்தரும் முன்மொழியில் ஒன்றி நின்றனர் மற்றவர் இந்நாடு கொள்ள வழியில்லாது சென்றனர் அந்நாளிங் காரியம் ஐயம் புகுந்ததே

விண்ணோர் மொழியென வெய்யபொய் தந்ததே தாய்மொழியைத் தாழ்ந்ததென்று தமிழவேந்தர் தள்ளவும் வாய்மொழியில் வழிபடற்கே வடமொழியைக் கொள்ளவும் மூன்றாங் கழகமே முற்றும் ஒழிந்தது மூவேந்த ரும்பின்னே முட்டி யழிந்தனர்

வள்ளுவர்கோள் நூலிழந்து வறிய வாழ்வை யுற்றனர்

தெள்ளுதமிழ்ப் பாணரும்பின் தீண்டுநிலைமை யற்றனர்.