உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 36.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இசைத்தமிழ்க் கலம்பகம்

ரைப்பாட்டு

நன்கூலம் ஒன்றையே நாடி வந்தொருவன்

நாய்கன் கடையிற் கேட்டால்

எண்கூலக் கலவையில் நீகேட்ட திருப்பதால் ஏற்றுக்கொள் என்ன மாட்டான்.

(தமிழ்)

77. தமிழ் இயன்மொழி திரவிடம் திரிமொழி ‘சங்கரா சிவ சங்கரா சிவ' என்ற மெட்டு

1

வாழிய தமிழ் வாழிய தமிழ் நாடெனும் பெயர் என்றுமே வாழியவே திராவி டம்எனில் வடவர் நாடதில் துன்றுமே.

2

திரவிடம் என்னும்பேர் தமிழ்என்னும் தென்சொல்லின் திரிபாயினும் தீந்தமிழ் தன்னைக் குறித்த காலமும் தென்மலை யேறிப் போனதே.

3

தந்தை யின்பெயர் தாங்கினும் மக்கள் தந்தையின் வேறே யல்லரோ செந்தமிழ் திரி திரவிடங்களும் செந்தமிழாக வல்லவோ.

4

எந்த மன்மொழி பேசினும் பிறர்இந்த நாடொரே யுரிமை செந்தமிழ்க் கெதும்தீங்கு செய்யாமற் சேர்ந்து வாழ்ந்திடின் அறிமெய்.

5

எந்த நாடுமே கொண்டுள்ள பெயர் சொந்தமாமொழி யாலன்றோ அந்த நாட்டினில் ஏனையர் குடிஅண்டி வாழ்வது தானின்றோ.

6

ஏந்து தாய்மொழி என்ன வென்றுதான் எடுத்துரைக்கவே விரும்பின் ஆந்திரத் தமிழன் எனத்தகும் அடைமொழி கொடுத்திடுமின்.

7

திரைந்த பால்தயி ராயி னும்அது திரும்பவும் பாலே யாகுமோ திரிந்து போகிய திரவிடம் பின்னும் தெளிந்த நற்றமிழ் ஆகுமோ.

8