26
சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து
முன்மை சேய்மைக்கும் அண்மைக்கும் பொதுவாதலால், இந்தியில் உகரச்சுட்டு நெடுஞ்சேய்மையைக் குறிக்கும். எ-டு: உதர் = அங்கே. தமிழில் சேய்மைச்சுட்டுத் தனியாயிருப்பதால், உகரச்சுட்டுச் சேய்மைக்கும் அண்மைக்கும் நடுவிடத்தையே அல்லது குறுஞ்சேய்மையையே குறிக்கும்.
உம் - உம்மை = முன்மை, குறுஞ்சேய்மை.
=
ஊ - உவ். உவள் உவண் - உவ்விடம்.
-
ஊன் > உவன். ஊம் உவம்.
உவன், உவள், உவர், உவ
―
உவை.
உல் +து – உஃது, உற்று (வழக்கற்றது).
(2) முன்னிலைப்பெயர்
முன்னிலைப்பெயர் முன்னாலிருப்பவரைக் குறிக்கும் பெயராதலால்,
முன்மைச்சுட்டிலும் தோன்றிற்று.
ஊன் > யூன்) > நூன் (ஒருமை).
ஊம் > யூம் > நூம் (பன்மை).
முற்செலவுக்கருத்து
உகை = முற்செலுத்து L.ago, Gk. ago, to put in motion; Skt. aj, to drive.
உந்து = முன்னுக்குத் தள், தள். உந்தி தள்ளுமிடம், கொப்பூழ்.
"உந்தி முதலா முந்துவளி தோன்றி
99
வயிற்றிலிருந்து காற்றைத்
(தொல்.83)
உந்தி - உதானன் = உந்தியினின்றெழும் காற்று.
உந்தல்
–
—
உஞ்சல்
—
—
ஊசல் ஊஞ்சல்
ஊயல்.
L. oscillium, a swing, E. oscillate, to swing.
உதை = (முத.) காலால் முன்னுக்குத் தள். உய் = முற்செல், முற்செலுத்து, முற்சென்று தப்பு. உய் “உமணர் உப்பொ யொழுகை
-
ஒய் = முற்செலுத்து.
99
(புறம்.116)
உய் உயிர் (உள்ளிருப்பது)
=
உடம்பைச் செலுத்துவது. இனி, உள் உய் உயிர் என்றுமாம்.
―
உய் – உயம் – வியம். வியம் = செலுத்தல், தேரோட்டுதல் (ஐங்.), வினைமேற் செலுத்தல், ஏவல். வியம் + கொள் - வியங்கொள் - வியங்கோள் = மதிப்பான ஏவல்.
ஊங்கு - ஊக்கு = முற்செலுத்து. ஊக்கல் = உள்ளத்தை அல்லது ஒருவனை ஒரு வினையின்மேற் செலுத்தல். ஊக்கம் = வினைமேற் செல்லும் மனம், தளரா மனம். ஊக்கு - நூக்கு = முன்னுக்குத் தள், தள்.
ஊர் (வி.) = முற்செல், செலுத்து, ஏறிச்செலுத்து, ஏறிச்செல், மெள்ளச் செல். முதுகிற் பாரமுள்ள விலங்கு மெள்ளச்செல்வது இயல்பு. ஊர்தி = வாகனம்,