உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து

எல்

எலி = முத. வெள்ளெலி. எலி X கருப்பை = காரெலி.

எல்

எல்லை, எல்கை. எல்கை

=

சூரியனால் ஏற்படும் கால அளவு,

காலவெல்லை, இடவெல்லை, எல்லை.

ஒ.நோ: பொழுது = சூரியன், காலம், காலவெல்லை. எல் ஏல் வேல்

வேலை வேளை.

வேல் வேலி = எல்லைத்தடுப்பு. வேலி - வேல் = வேலி யடைக்கும் முள், வேலமரம். வேலை = நிலவெல்லையான கடல்.

எல் - Gk. helios, the sun.

எஃகு = வயிற்றுப்பாகத்தை மேலெழுப்பு.

எஃகு = வில்லாற் பஞ்சையெழுப்பித் தூய்மை செய்.

எகிர்

எச்சு

எழும்பு.

உச்சம். ஹெச்சஸ்தாய் - உச்சநிலை.

எஞ்சு = மேற்படு, மிகு, மீந்திரு. எஞ்சு + அம் - எச்சம்

எச்சம் = மீந்திருப்பது.

எஞ்சு + இல் - எச்சில் = மீந்தவுணவு, உமிழ்நீர். எஞ்சுவது எச்சு.

எச்சு = மீந்தவுணவு, வாய்நீர்பட்ட வுணவு, வாய்நீர்.

எச்சம் = பறவை துப்புவதுபோல் இடும் மலம், பெற்றோர் இறந்தபின் மீந்திருக்கும் பிள்ளைகள்.

எட்டு = உயர நில், தூர நில், கையுயர்த்தித் தொடு. எட்டு = மேன்மேல் வைக்கும் காலடித் தூரம்.

எடு

=

மேலெடு, தூக்கு, சுவர் அல்லது கட்டடம் எழுப்பு, வெளிப் படுத்து, நீக்கு. எட்டு எட்டம் எட்டி எட்டுதல். எட்டன் செட்டி - சேட்

சிரேஷ்டி.

எடு + ஐ எடை.

எடுப்பு = உயர்வு, வளர்ப்பு. கிழங்கெடுத்தல் முள்ளெடுத்தல் முதலிய வழக்குகள் வெளிப்படுத்தற் பொருளைக் குறித்தல் காண்க.

ஆங்கிலத்தில், elevate, erect, edify, educate, elicit முதலிய சொற்களும் e, ex முதலிய முன்னொட்டுகளும், எகர முதனிலையைக் கொண்டு, மேற்படுத்தல் எடுத்தல் வெளிப்படுத்தல் முதலிய பொருள்களை யுணர்த்தல் காண்க.

Cf. E. - Gk. epi, Skt. api, L. ob, on.

எண் = மேன்மேல் நினை, மேன்மேல் தொகையிடு.

எத்து = மேனோக்கி உதை, எற்று.

எத்து - எத்தன் = ஏமாற்றுபவன்.

எம்பு = எழும்பு.

எவ்வு = எழும்பு, குதி, தாண்டு.