உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சுட்டு வேர்ச்சொற்கள்

எறி

=

=

57

மேல்விடு. எற்று எத்து நிமிர்த்து. கழுதையுதைப்பு மேனோக்கியதாதலின் எறிதல் என்று சொல்லப்படுவதை நோக்குக.

என் = மேன்மேற் சொல், சொல். என்று, என்றா, எனா, என என்னும் வினையெச்ச விடைச்சொற்கள் எண்ணுதற்பொருளில் வருதலை நோக்குக.

தென்னு = = மேனோக்கிப் பெயர். நெம்பு = தென்னு. பெயர் = கீழிருப்பதை மேற்படுத்து, வெளியாக்கு, இடம் மாறு. பெயர்- பேர்.

நிலை – நில் – நிலு - நிலுவை. நிலு - நிறு - நிறை. நிலுத்து - நிறுத்து. நிறு - நிறுவு. நிறு + வை – நிறுவை. நிறுத்தல் = நிற்பித்தல், தராசை நிற்பித்து எடை பார்த்தல்.

நிலை நினை. நினைத்தல் = மனத்தில் ஒரு பொருளை நிறுத்தல். நெடு நடு – நட்டு – நாட்டு. நெட்டு – நட்டு. நடுதல் = நெட்டுக்கு வைத்தல், = நிற்பித்தல்.

-

மேக்கு. மேல் - மேனி. மே

ஏ-மே- மேல். மேல் + கு - மேற்கு. மே + கு மெய் = உடம்பு, கட்புலனான உடம்புபோல் உண்மையானது.

Cf. substance - substantial = true.

மே மேது = மேல் மண்ணிடு. மேல் - மேலு மேடை மேசை.

ஒ.நோ: பீடம் - table; பீடபூமி = table land.

மேடு - மோடு. மேடு -

மே மேய் வேய். மே + கம் மேகம் (மேலுள்ள நீர்). மே - மேவு = மேற்படு, பொருந்து, விரும்பு. “நம்பு மேவு நசையா கும்மே” (தொல். 812). மே - மீ மிகு. மிகு - மிகை. மிசை (மேல்). மீ - மீது - மீறு - வீறு. மீது - மித = நீர்மேற் கிட. மிதப்பு = செருக்கு. மிலை = தலைமேலணி. மீது - மெத்து = மேற்படு, வெல். = மெத்து - மெத்தை = மேல்தளம், மேனிலை, மேலிடும் பஞ்சணை. மெத்து – மெது மெதுவு = பஞ்சணை போன்ற மென்னிலை. மெது - ம்ருது(வ.)

A.S. smoethe, E. smooth, Low Ger. smoedig, Ger. schmeidig. மெது - மெல் மெல் = மெதுவு, மெதுவாகு, மெதுவாகும்படி பல்லால் அரை.

E. mellow, soft and ripe, A.S. mearu, Dut. mollig, L. mollis, Gk. malakos, soft; E. mollify, to make soft, to calm, L. mollusc, one of those animals which have a soft body, E. melt, A.S.meltan, to soften, to become liquid.

E. mill, A.S. miln, Ger. muhle, L. mola, a mill - molo, to grind. Skt. mrid, to bruise.

மிகல் – மிக்கிலி (தெ.) Goth. mikilis, Ice. mjok, A.S. micel, O.E. michel, muchel, E. much.

மீ - மிஞ்சு விஞ்சு. மிஞ்சு + அம் மிச்சம்; மிஞ்சு + இல் - மிச்சில். மிசை = மிஞ்சியதை உண், உண். “மிச்சில் மிசைவான் புலம்” (குறள். 85). Cf.E. mess, to eat, O.Fr. mes, Fr. mets.