உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மூவிடப்பெயர்

65

னகரவீறு ஒரு காலத்தில் திணைப் பொதுவாயும் பாற்பொது வாயு மிருந்தது. ஆனைக்கொம்பன் (ஒருவகை நெல்), வலவன் = வலப்பக்கத்திலுள்ள மாடு, கத்தரிப்பான் (கத்தரிக்கோல்), உள்ளான் (ஒரு பறவை), கக்குவான் (ஒரு நோய்), கடுவன் (ஆண்குரங்கு), கணவன் (ஆண்குரங்கு) முதலிய பெயர்கள். 'அன்' ஈற்றின் திணைப் பொதுமையையும் எவன் என்னும் பெயர் அதன் திணைபாற் பொதுமையையும் உணர்த்தும். எவன் = எந்த மகன். எவன் = எது, எவை. இனி, மகரம் போலியில் னகரமாவது முண்டு.

எ-டு: இடம்

இடன், திறம் – திறன்.

கான் மான் முதலிய பெயர்கள் னகரவீற்றை நேரடியாகவே பெற்றுள்ளன. மகன் என்னும் பெயர் ஒரு காலத்தில் பெண்பாற் பெயரொடும் சேர்ந்து வழங்கிற்று. எ-டு: பெண்மகன்.

இன்றும் பெட்டைப் பசன்கள் என்று வழங்குதல் காண்க. பையன் – பயன் பசன்.

ளகரவீறு பல சொற்களில் இயல்பாகவும் போலியாகவும் அமைந்துள்ளது. பல சொற்களில் ளகரவீறு ணகரவீறாய்த் திரிவதால் அவண், இவண் முதலிய சொற்கள் முதலாவது ளகரவீறா யிருந்தனவென்று கொள்ள இடமுண்டு.

உயர்திணைப் பன்மை குறிக்கும் ரகரவீறு இர் (இரண்டு) என்னும் பெயரின் திரிபாகக்கொள்வர் ஞானப்பிரகாச அடிகள். இது மிகப் பொருத்தமாய்த் தோன்றுகின்றது. ஆயினும், ரகரவீறும் பிறவீறுகளைப்போல இயல்பாய் அல்லது போலியாய்த் தோன்றுவதாயுள்ளது. ஊர், தொடர் முதலியவற்றில் இயல்பாயும் இடக்கர், சுரும்பர் முதலியவற்றில் இணைப்பீறாயும் சாம்பர், பந்தர் முதலியவற்றில் போலியீறாயும் ரகரம் தோன்றியுள்ளது. மகரத்திற்கு ரகரம் போலியாவது பெரு வழக்காதலால், முதலாவது அவம், எவம் என மகரவீறாயிருந்த சுட்டு வினாப் பன்மைப் பெயர்கள் பின்பு ரகரவீறாய்த் திரிந்தன என்று கொள்ள இடமுண்டு. ம- ர போலி, எ-டு: வணம் வணர், நாகம் நாகர், காமம் - காமர்,

யாணம் -யாணர், முன்னம் முன்னர்.

ரகரவொற்று ஆங்கிலத்தில் திணைப்பொதுவாயும் பாற்பொதுவாயும் இருப்பதை driver, screw -driver, teacher முதலிய சொற்களாலறியலாம். ஐம்பால் விகுதிகள்

சேய்மைச் சுட்டு

அவன் – ஆன் ஆன் – அன் - ன் (ஆண்பால்)

அவள் - ஆள் - அள் - ள் (பெண்பால்)

அவர் - ஆர் – அர் – ர் (பலர்பால்)

-

ஆது

ஆது து

அது - அசி

அசி – தி இ

ஒன்றன்பால்