உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 37.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




66

ஆ - அ

அவை

வை

அண்மைச்சுட்டு

இவன்

சுட்டு விளக்கம் அல்லது அடிப்படை வேர்ச்சொல் ஐந்து

பலவின்பால்

ஈன் -இன் -ன் (ஆண்பால்)

இவள் - ஈள் - இள் - ள் (பெண்பால்)

-

இவர் ஈர் இர் ர் (பலர்பால்)

-

ஈது இது து

இது - இதி - தி - இ

-

இவை - வை (பலவின்பால்)

இடைமைச் சுட்டு

ஒன்றன்பால்

உவள் - ஊள் - உள் - ள் (பெண்பால்)

உவன் ஊன் உன்

ன் (ஆண்பால்)

ள்

ர்

உவர் – ஊர் - உர் -ர் (பலர்பால்)

ஊது

-

உது -து

உது - உதி - தி - இ

உவை வை (பலவின்பால்)

ஒன்றன்பால்

‘து’ விகுதி புணர்ச்சியில் று, டு எனத் திரியும்.

எ-டு: போ + இன் + து - போயிற்று.

பால் + து பாற்று.

கண் + து - கட்டு.

வினாப்பெயரினின்று வேறு

பால் விகுதிகள் வினாவைக் குறியாமையானும், வினாப்பெயரினும் சுட்டுப்பெயர் விகுதிகளே யிருத்தலானும், பால்விகுதிகள் தோன்றா என அறிக.

ஐம்பால் விகுதிகள் சுட்டுப்பெயர்களினின்றே தோன்றியவை யாதலின், அவை மூவகைச் சுட்டுப்பெயரினின்றும் தோன்றியிருத்தல் வேண்டும். மகளிர் பெண்டிர் கேளிர் வேளிர் புத்தேளிர் முதலிய பெயர்களில் ‘இர்’ஈறும், வள்ளிது தெள்ளிது முதலிய பெயர்களில் ‘இது’ ஈறும், வாரிதி என்னும் பெயரில் ‘இதி’ ஈறும், வெட்டி கொள்ளி முதலிய பெயர்களில் 'இ' ஈறும் இருத்தல் காண்க. மண்வெட்டி, விறகுவெட்டி, கயற்கண்ணி, என ‘இ’ ஈறு ஒருமைப்பால் மூன்றையுங் குறிப்பது, அது ஒரு காலத்தில் திணைபாற் பொதுவாயிருந் தமையைக் காட்டும். தெலுங்கில் அதி, இதி, ஏதி என்னும் சுட்டுவினாப் பெயர்கள் பெண்பாலையும் ஒன்றன்பாலையும் உணர்த்துவதும், தமிழிலும் பெண்டிரைப் பொதுவாக அஃறிணைபோற் கொண்டு அது வரும், அந்த அம்மா போகும் எனக் கூறுவதும், இங்குக் கருதத் தக்கன. ரகரவீறு படர்க்கைக்கே யுரியதேனும், நீம் என்னும் பன்மைப்பெயர் வழக்கற்ற பிற்காலத்தில், நீ என்னும் ஒருமைப் பெயரோடு