உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முகவுரை

ix

முகவுரை

ஒரு மொழியின் பெருமை அல்லது வலிமை வலிமை அதன் சொல்வளத்தால் அறியப்படும். சொல்வளத்தைக் காட்டுவது அகராதியென்றும் சொற்களஞ்சியம்.

பிற நாடுகளிலெல்லாம், தன் மொழி செம்மொழியாயின், அதற்கே முதலிடமும் உயர்வும் தரப்படும். தமிழ்நாட்டிலோ, தன் மொழி உயர்தனிச் செம்மொழியா யிருந்தும், அது அயலாரால் மட்டுமன்றித் தமிழராலும் மறைக்கப்பட்டும் குறைக்கப்பட்டும் பழிக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் வருகின்றது.

தொகுத்தவரின்

வயவர் (Sir) பிரடெரிக்கு நிக்கல்சன் என்னும் துரைமகனாரின் தூண்டுதலின்மேல், சென்னைப் பல்கலைக்கழகம் 1913 முதல் 1939 வரை 27 ஆண்டுகளாக 4,10,100 உருபா செலவழித்து, ஒரு தமிழகராதி தொகுத்தது. அது சிலவகையில் முந்திய சொற்களஞ்சியங்களினும் மிக விரிவுபட்டதாயிருந்தும், அதைத் தலைமையாயிருந்து தகுதியின்மையால், பலவகையில் மிகக் குறைபாடுள்ளதும் தமிழுக்குக் கேடானதுமாக முடிந்தது. அதன் ஆறு மடலங்களுள் (Vols.) ஐந்து வெளிவந்தபின், 1934 -ல், அவ் வைந்திலு மில்லாத இருநூறு சொற்களைத் தொகுத்து, அதன் பதிப்பாசிரியரான திரு. வையாபுரிப்பிள்ளைவர்கட் கனுப்பினேன். அவர்கள் என் பெயரைச் சொல்லுதவினார் பட்டியிற் சேர்க்காது கருத்துதவினார் பட்டியில் மட்டும் சேர்த்துக் கொண்டு அகராதியின் ஒரு தொகுதியை இலவசமாக எனக்கு அனுப்பு வித்தார்கள். ஆயின், மாதம் நூறுருபாச் சம்பளத்தில் என்னை ஈராண்டிற்கு அமர்த்திக் கொண்டால், ஆயிரக்கணக்கான சொற் களைத் தொகுத்துத்தரமுடியும் என்று நான் இட்ட கருத்தை, அவர்கள் முற்றும் புறக்கணித்துவிட்டார்கள். அதனால், மேற்கொண்டு ஒன்றும் அனுப்பவில்லை. இது நான் திருச்சிராப்பள்ளியிலிருந்தபோது நிகழ்ந்தது.

1

நான் சேலங்கல்லூரி சென்றபின், 'A Vritical Survey of the Ma- dras University Tami.I Lexicon' என்னும் பெயரால், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் ஐம்பாற்பட்ட 41 வகைக் குற்றங்குறைகளை எடுத்துக்காட்டுடன் ஆங்கிலத்தில் எழுதி