உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




X

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியின் சீர்கேடு

அச்சிட்டுச் சுவடி வடிவில், 17.16.1955 அன்று, ஓர் ஆராய்ச்சித் திறனாய்வைச் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக்குழுவிற் கனுப்பினேன். இன்றுவரை அதனிடமிருந்து எவ்வகை மறுமொழியுமில்லை.

ஈராண்டிற்குமுன், பண்டாரகர் (Dr.) சேதுப் பிள்ளையவர் களிடம் இதைப்பற்றிக் கேட்டபோது, அவர்கள், "சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியைப்பற்றி நீங்கள் எழுதிவிடுத்த திறனாய்வு குறித்து பர். (Dr.) இலக்குமணசாமி முதலியார் அவர்கள் என்னைக் கேட்டார்கள். நான் ‘அவ்வகராதியில் இரண்டொரு குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை அடுத்த பதிப்பில் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிடேன்" என்று (தங்கட்கியல்பான வேறு நடையில்) தங்கள் பதவிச்செருக்கினால் துணிச்சலாகச் சொன்னதினின்று, பர். இலக்குமணசாமி முதலியார் அவர்கள் எத்துணை ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்றும், நான் எவ்வளவு மறைக்கப்பட்டுள்ளேன் என்றும் கண்டுகொண்டேன். இனி பிள்ளை அவர்கள் முதலியார் அவர்களிடம் நேரில் என்ன சொன்னார்களோ, அது இறைவனுக்குத்தான் தெரியும்.

1956 ஆம் ஆண்டு சூலை மாதம், தமிழ் வேர்ச்சொல் அகராதித் தொகுப்பிற்கென்றே, அரசவயவர் (Rajah sir) முத்தையாச் செட்டியார் அவர்களின் சிறப்பதிகாரத்தினாலும் தமிழ்ப்பற்றினாலும், வலுத்த எதிர்ப்பிற்கிடையே அண்ணாமலை பல்கலைக்கழக மொழியியல் துறையில் வாசகனாக (Reader) அமர்த்தப்பெற்றேன். 'ஆயின், என் வேலையை மேற்பார்க்கும் தகுதி மறைமலையடிகட்குப்பின் எவருக்கும் இல்லாவிடினும், அத் தகுதியுடையதாக அமர்த்தப்பட்ட குழுவின் தலைவரான வங்கப்பெருமான் பர் (ள.மு.) சட்டர்சி இ பணியைச் செய்ய வேண்டியிருந்ததினால், முதலீராண்டு அகராதித் தொகுப்பில் ஈடுபட முடியவில்லை.

>

அச்சன் என்பது அத்தன் (தந்தை) என்பதன் திரிபான தென்சொல் என்றும், தமிழர் முழுகிப்போன குமரிக்கண்டத்தில் தோன்றி வடக்கே சென்றனர் என்றும் நான் எழுதியதை மறுத்து, அச்சன் என்பது வடசொற் நிரிபென்றும் (ஆர்ய அஜ்ஜ (பிராகிருதம்) ழூ அச்சன்). தமிழர் நண்ணிலக் கடற்கரையினின்று (Mediterranean Region) வந்தவரென்றும், பர். சட்டர்சி கூறியதை நான் ஒப்புக்கொள்ளாமையால், 1958 -ல் பொதுவாராய்ச்சித் துறைக்கு மாற்றப்பட்டேன். அதிலிருந்து மூவாண்டிற்குள், நான் கடந்த 30 ஆண்டுகளாகச் செய்துவந்த சொல்லாராய்ச்சி மொழியாராய்ச்சியின் பயனாகத் தொகுத்தனவும், சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதியில் இல்லாதவுமான, 4500 தனிச்சொற்களையும்