உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




2

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

பரக்கை பெ. அநாகரிகமாய்த் தன்னை அலங்கரித்துக்கொள்ளும் பெண்.

புக்கா, பெ. ஒருவகைப் புறா.

புடங்கு, பெ. நீண்ட மண்டையின் பின்புறம்.

பொண்டான் பெ. எலியின் மறைவான பக்கவளை.

போஞ்சான், பெ. போலி (வேலை).

போந்தான், பெ. பெருங்கோழி.

மீ-தல், வி. மீந்திருத்தல்.

மீ-த்தல், வி. மீத்து வைத்தல்.

மோள்(ளு)தல், வி. சிறுநீர் பெய்தல்.

யாங்கள், த.ப.பெ.

வழமை, பெ. வழக்கம்.

(2) கூட்டுச்சொல்

அசையாக்கட்டை,பெ. ஒருவகைச் செடி.

அஞ்சறைப்பெட்டி முறுக்கு, பெ. கெண்டி முறுக்கு.

அடங்காமரம், பெ. ஒருவகை மரம்.

உப்புத் தீயல், பெ. ஒருவகைக் கருவாட்டுச்சாறு.

உலையாப்பம், பெ. ஒரு வகை ஆப்பம்.

ஓட்டியடைந்த நேரம், பெ. கன்று காலிகளைத் தொழுவிலடைக்கும்

மயங்கு பொழுது.

கவைமகன், பெ. உடலொட்டிய இரட்டைப்பிள்ளை. (Siamese twins) கருங்களமர், பெ. உழுதுண்ணும் வேளாளர், பண்ணையாள்கள்

காரொக்கல், பெ. வறிய சுற்றம்.

குச்சுக்கிழங்கு, பெ. மரவள்ளிக்கிழங்கு (tapioca).

கொறு கலப்பை, பெ. ஒரு விண்மீன் கூட்டம் (Orion).

கோட்டான்காய், பெ. கூகைக்காய்.

சட்டாலொட்டா, பெ. ஒருவகைக் கடல்மீன்.

-

செஞ்செவ்வாப்பு, பெ. புதிதாய்ப் பிறந்த குழந்தையுடம்பில் செம்படைகள் தோன்றும் நோய் நிலை. கருஞ்செவ்வாப்பினும் வேறானது.

தலைவெட்டிக் கருவாடு, பெ. தலையில்லாது விற்கும் ஒருவகைக் கருவாடு.

நாய்ச்சுறா, பெ. ஒருவகைச் சுறாமீன்.

பத்தநடை (பற்றுநடை), பெ. கமலையேற்றத்தில் காளைகள் கூனையை இழுத்துச் செல்லும் இறக்கம்