உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொல் வழுக்கள்

7

என்பதை, சிறிய திருவடியினின்று வேறுபடுத்தப்பட்ட தென்று ஆங்கிலத்திற் குறித்துள்ளனர். இங்ஙனம், மேற்குறித்த முச்சொல்லும் விளக்கமேற்கோளில் வந்திருப்பினும், அவற்றை அவற்றோடொத்த அல்லது அவற்றிற்கெதிரான சொற்களைப்போல், சொல்வரிசையிற் சேர்க்கவில்லை.

7. சொல்லின் கொச்சை வடிவைச் சொல்வரிசையிற்

(1) கொச்சை வடிவுமட்டும்

சேர்த்தல்

சில சொற்களின் கொச்சை வடிவையே சொல் வரிசையிற் சேர்த்து, அவற்றின் திருந்திய வடிவை மூலக் குறிப்பில் மட்டும் அரைகுறையாய்க் காட்டிவிட்டிருக்கின்றனர்.

குறித்த சொல்

எ.டு: அண்ணாக் கயிறு

அப்பப்போ

அருணாக்கயிறு

காட்டிய மூலம்

அரைநாண்+

அவ்வப்போது

அரைநாண்+

ஆமக்கன்

ஆண்மகன்

இப்பவும்

இப்போதும்

கடிச்சவாய்தடிச்சான்

கடி+

சோத்தான்

சோறு+

பிடிச்சராவி

பெரும்பாலும்

பொட்டச்சி

பிடி+அராவு

பெட்டை

இனி, அர்ணாள் என்னும் கொச்சை வடிவைக் குறித்து அரைநாண் என்று மூலங்காட்டி, அர்ணாட்கொடி, அர்ணாட் கயிறு, என எடுத்துக்காட்டுத் தந்திருப்பது அகராதிக்கு மிகமிக இழுக்குத்தருவதாகும். (Vol.l ப.113).

(2) கொச்சைவடிவும் திருந்திய வடிவும்

திருந்திய வடிவு

அகப்பை

அஞ்சறைப்பெட்டி

அடைய வளைந்தான்

அப்பத்தாள்

அப்பளம்

அப்போது அரைநாண் இடைகழி இரண்டு இரா

ஆப்பை

கொச்சை வடிவு

அஞ்சலப்பெட்டி, அஞ்சாரப்பெட்டி

அடைய வளைஞ்சான்

அப்தான்

அப்பளாம்

அப்பம், அப்போ

அருணான்

இரேழி, ரேழி

ரெண்டு

ரா