உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொல் வழுக்கள்

13

"இணைந்தியல் காலை யரலக் கிகரமும் மவ்வக் குகரமும் நகரக் ககரமும்

மிசைவரும் ரவ்வழி உவ்வு மாம்பிற.

(149)

என்று விளக்கமாகக் கூறியுள்ளார். இந்நூற்பாக்கள் (சூத்திரங்கள்) வடவெழுத் துகளை மாற்றும் முறையைச் சொன்னவையேயன்றி, வடசொற்களைக் கடன் கொள்ளுமாறு தூண்டியவையல்ல.

தமிழில் எல்லாவெழுத்துகளும், பிற மொழிகளிற்போல், சொல்லில் மூவிடத்தும் வருவனவல்ல. முதனிலை யெழுத்துகளும் இடைநிலை யெழுத்து களும் இறுதிநிலை யெழுத்துகளும், இன்னின்னவென்று இலக்கணத்தில் வரையறுக்கப்பட்டுள்ளன. இவ்வரம்புமீறி நூற்றுக்கணக்கான அயற்சொற்கள் அகராதியிற் குறிக்கப்பட்டுள்ளன. ரகர உயிர்மெய்களுள் 'ரை' தவிர மற்றப் பதினொன்றும், லகர உயிர்மெய்களுள் ‘லை’ தவிர மற்றப் பதினொன்றும், டகர வுயிர்மெய்களுள் 'டு' தவிர மற்றப் பதினொன்றும், மொழிமுதலெழுத்துகளாகக் காட்டப்பட்டுள்ளன. இது தமிழிலக்கணத்தை, அடியோடு ஒழித்தலன்றி வெறெதனை நோக்கமாகக் கொண்டிருத்தல் கூடும்?

எ.டு:

முதனிலை டம்ளர்

இடைநிலை

இறுதிநிலை

காப்தாரி

சநி

த்ரப்ஸம்

பால்யன்

ரப்

ரஹ்மத்

ரக்தம்

ரயத்

வோரகம்

ரத்னம்

ஸ்தலம்

ஜிஹ்வா

ஷட் ஷபாஷ்

முகமதிய மன்னராட்சியில் உருதுச் சொற்கள் தமிழ்நாட்டில் வழங்கின வெனின், அவற்றைத் தனியாகத் தொகுத்து வெளியிடவேண்டுமே யன்றி, தமிழ்ச் சொற்களொடு கலத்தல் கூடாது. சென்னை யகராதியில் அவற்றையெல்லாச் சேர்த்தது. வேண்டுமென்று தமிழின் தூய்மையைக் குலைத்தற்கேயன்றி வேறன்று. ஆகவே, அதற்குத் தென்னிந்திய அகராதி (South Indian Lexicon) என்னும் பெயரே பொருத்தமாம்.

11. இனச்சொல் இன்மை

பல தமிழ்ச்சொற்கட்குத் திரவிடமொழியினச் சொற்கள் அகராதியிற் குறிக்கப்படவில்லை.

எ.டு:

அது அவன் உள்

தமிழ்ச்சொல்

அதி

குறிக்கப்படாத் தெலுங்கினச்சொல்

வாடு, வாண்டு

லோ