உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொருள் வழுக்கள்

3. மிகைபடக் கூறல்

17

கரித்தல் என்னும் சொல்லிற்கு, “to be saltish to the taste; உப்புச் சுவை மிகுதல். "இந்தக் கறி உப்புக்கரிக்கிறது" என்று பொருளும் எடுத்துக் காட்டும் தரப்பட்டுள்ளன.

கரித்தல் என்னும் வினைச்சொல்லிற்கு, மிகுதல் என்பதுதான் பொருளே யன்றி உப்புக்கரித்தல் என்பதன்று. உப்புக்கரித்தல் என்பதே பொருளாயின், எடுத்துக்காட்டு, 'இந்தக் கறி கரிக்கின்றது' என்றன்றோ இருத்தல் வேண்டும். அங்ஙன மிருப்பின் பொருள் வேறுபட்டுவிடும். உப்பு என்னும் சொல்லொடு கூடினாலன்றி, கரித்தல் என்னும் சொல்லிற்கு உப்புச்சுவைப் பொருள்தரும் ஆற்றலில்லை. உப்புக்கரித்தல் என்னும் மரபுவினை, தனியாகவும் அகராதியில் அதற்குரிய இடத்திற் குறிக்கப்பட்டு, உவர்ப்பு மிகுதல் என்னும் பொருள் கூறப்பட்டிருத்தல் காண்க.

4. வழுப்படக்கூறல்

அளைமறிபாப்பு என்னும் சொற்கு.

"A mode of construing in which the expression at the end of a verse is conjoined with a word in the middle of a verse, or with one in the beginning of another verse, one of eight porulkol; பாட்டின் ஈற்றினின்ற சொல் இடையிலும் முதலிலுஞ் சென்று பொருள் கொள்ளப்படும் முறை. என்று விளக்கங் கூறப்பட்டுள்ளது. இது தாப்பிசைப் பொருள்கோளுக்கு அல்லது விளக்கணிக்கு ஒருவாறு பொருந்துமேயன்றி, அளைமறிபாப்புப் பொருள்கோளுக்குப் பொருந்தவே பொருந்தாது.

அளைமறிபாப்புப் பொருள் கோளாவது, தலை முன்னும் வால் பின்னுமாக வளைக்குட் புகுந்த பாம்பு, அங்ஙனமே திரும்பாது திரும்பவும் தலை முன்னாக வளைந்து மாறிக் கொள்வதுபோல், ஒரு செய்யுள் தலைகீழாய் அடியடியாக வெடுத்துப் பொருள் கொள்ளப்படுவது.

"சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதியிற்

சுழல்வார் தாமும்

மூழ்ந்த பிணிநலிய முன்செய்த வினையென்றே முனிவார்தாமும் தாழ்ந்த வுணர்வினராய்த் தாளுடைந்து தண்டூன்றித்

தளர்வார் தாமும்

வாழ்ந்த பொழுதினே வானெய்து நெறிமுன்னி முயலா தாரே. இச்செய்யுளில், 4ஆம் அடி முதலடியாகவும், 3ஆம் அடி 2ஆம் அடியாகவும், 2ஆம் அடி 3ஆம் அடியாகவும், முதலடி 4ஆம் அடியாகவும், மாறியமைந்து பொருள் படுதல் காண்க.

ஈர்ங்கை என்னும் சொல்லிற்கு,

"Wet hand, fig. hand that has been washed after taking one's meal; உண்டு பூசியகை. ஈர்ங்கை விதிரார் கயவர் (குறள். 1077)"