உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொருள் வழுக்கள்

(1) மகிழ்வடைதல்.

(2) கள்ளைப் பருகி வெறி கொள்ளுதல்.

(3) மதமுடையதாதல்.

(4) செருக்குறுதல்.

21

களி என்னும் வினை, கள் என்னும் பெயரினின்று தோன்றிக் கட்குடி தலையே முதற்கண் உணர்த்துவதால், மேற்காட்டப்பட்டுள்ள நாற்பொருளும் பின்வருமாறு மாறியமைதல் வேண்டும்.

(1) கள்ளைப் பருகி வெறி கொள்ளுதல்.

(2) மதமுடையதாதல்.

(3) மகிழ்வடைதல்.

(4) செருக்குறுதல்.

ஆக்கசுபோர்டுச் சிற்றகராதியிலும் (The Concise Oxford Dictionary) Intoxicate என்னும் சொல்லுக்கு இம் முறையிலேயே பொருள் கூறப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

7. வடமொழியிற் பொருள் கூறல்

66

எ-டு: 'ஆமென்... Verily, sol be it, used by Christians usu. at the close of prayer or hymn; ததாஸ்து.

இதில், தமிழ்ச்சொல்லே யில்லை. 'ததாஸ்து' என்னும் வடசொற்குப் பதிலாக, அஃதாக, அங்ஙனமே, அவ்வாறாகுக, அப்படியே ஆகக்கடவது என்பவற்றுள் ஒன்று இருக்கலாமே! சென்னை யகராதி தமிழருக்கேற்பட்டதா? வடமொழியாளர்க் கேற்பட்டதா? பொதுமக்கள் இதைக் கவனிக்க.

8.ஒருபொருட் பலசொற்களின் வேறுபாடு காட்டாமை

ஒவ்வொரு செம்மொழியிலும் ஒருபொருட் பலசொற்கள் நிரம்பவுள. அவை பருப்பொருளில் ஒன்றுபட்டிருப்பினும் நுண்பொருளில் வேறுபட்டவை. சொல்வளத்திற் சிறந்த தமிழ் ஒருபொருட் பலசொற்களிலும் சிறந்துள்ளது. ஆயின், அவற்றின் நுண்பொருள் வேறுபாட்டைச் சென்னை யகராதி பொதுவாய் எடுத்துக்காட்டுவதில்லை. சொல்லுதலைப்பற்றிப் பல சொற்கள் தமிழில் உள. அவற்றுட் பலவற்றின் சிறப்புப்பொருளை அகராதி எடுத்துக்கூறவில்லை.

எ-டு: சொல்

நுண்பொருள்

அறைதல்

ஓங்கிப்பேசுதல், வன்மையாகச் சொல்லுதல்.

இயம்புதல்

இனிமையாகச் சொல்லுதல், இசைக்கருவி வியக்கிச் சொல்லுதல்.