உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

இசைத்தல் கோவையாகச் சொல்லுதல்.

உரைத்தல் நூலுக்கு உரைகூறுதல், விளக்கிச் சொல்லுதல்.

கூறுதல் பாகுபடுத்திச் சொல்லுதல்.

சாற்றுதல் பலரறிய நல்லுரை கூறுதல்.

நவிலுதல் நாவினால் ஒலித்துப் பயிலுதல்.

நுதலுதல் சொல்லித் தொடங்குதல்

நுவலுதல் நூலுரைத்தல், நுண்பொருள் கூறுதல்.

பகர்தல் பண்டங்களின் விலை கூறுதல்.

பறைதல் உரத்துச் சொல்லுதல்.

பன்னுதல் பணிக்காய் (விவரமாய்)ச் சொல்லுதல்.

புகலுதல் விரும்பிச் சொல்லுதல்.

புலம்புதல் தனிமையிற் சொல்லுதல்.

பேசுதல் ஒரு மொழியிற் சொல்லுதல்.

மாறுதல் திருப்பிச் சொல்லுதல், மறுமொழி கூறுதல்.

மொழிதல் சொற்களை நன்றாய்ப் பலுக்கிச் சொல்லுதல்.

ஆய், யாய், ஞாய், தாய் என்னும் நான்கும் அன்னையைக் குறிக்கும் சொற்கள். இவை இடம்பற்றி வேறுபட்டவையாயினும், அகராதி சிறிதும் வேறுபடுத்திக் காட்டவில்லை.

ஆய் - (பொது)

யாய்

(எம்+ஆய்) எம் அன்னை (தன்மைத்தொடர்பு)

ஞாய் - (நும்+ஆய்) நும் அன்னை (முன்னிலைத் தொடர்பு) தாய் - (தம்+ஆய்) தம் அன்னை (படர்க்கைத் தொடர்பு)

"யாயும் ஞாயும் யாரா கியரோ” என்னும் குறுந்தொகைச் (40) செய்யுட்கு பண்டாரகர் (Dr.) உ. வே. சாமிநாதையக் உரைத்துள்ள உரையைக் காண்க. 9. எதிர்ச்சொற்களின் வேறுபாடு காட்டாமை

எ.டு :

ஆணிடி (தாக்குவது)

x பெண்ணிடி (தாக்காதது)

இடுமுள்வேலி (பட்டுப்போனது) x முள்வாழ்வேலி (வளர்வது)

ஒட்டிப்பாடுதல் (சொல்லொற்றிப் பாடுதல், சார்ந்து பாடுதல்) ஒட்டிப்பேசுதல் (சார்பாய்ப் பேசுதல்)

கருங்களமர் (உழுதுண்பார்)

X வெட்டிப்பாடுதல் (சொல்லொற்றாது பாடுதல், மாறாய்ப்பாடுதல்)

X வெட்டிப்பேசுதல் (மாறாய்ப் பேசுதல்)

x வெண்களமர் (உழுவித்துண்பார்)