உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொருள் வழுக்கள்

23

காரொக்கல் (வறிய சுற்றம்) கொட்டுக்கலியாணம்

(மேளத்துடன் கூடியது)

x வெள்ளொக்கல் (செல்வச் சுற்றம்) x கட்டுத்தாலி (மேளமில்லாதது)

தென்னைமரத்தடியில் ஒருவரே இளநீர் குடிப்பின் சொத்தையாவது ஒல்லித்தேங்காய் என்றும், கோட்டான் உட்கார்ந்து சொத்தையாவது அல்லித் தேங்காய் என்றும், தஞ்சை மாவட்டத்திற் கூறுகின்றனர்.

அல்லித்தேங்காய், ஆணிடி, பெண்ணிடி, இடுமுள்வேலி, முள்வாழ்வேலி ஒட்டிப்பாடு, ஒட்டிப்பேசு, கருங்களமர், காரொக்கல், கொட்டுக்கலியாண என்னும் சொற்கள் அகராதியில் இல்லை.

10. எடுத்துக்காட்டின்மை

வந்து என்னுஞ் சொல் அசைச்சொல் என்பதற்கு எடுத்துக்காட்டொன்றும் குறிக்கப்படவில்லை.

நேரசை, நிரையசை, நேர்பசை, நிரைபசை என்னும் நால்வகை அசை களுள், நிரையசை ஒன்றிற்கே, அதுவும் ஆங்கிலத்தில் மட்டும், எடுத்துக்காட்டுத் தரப்பட்டுளது.

11. கூறியது கூறல்

(1)

களைக்கொத்து என்னும் சொல் ககரத்திற்குரிய 2ஆம் மடலத்தில் 817ஆம் பக்கத்திலும், பின்னிணைப்பில் (அனுபந்தத்தில்) 207-ஆம் பக்கத்திலும், பொருள்காட்டவும் குறிக்கவும் பட்டுக் கூறியது கூறலாகவுள்ளது.

(2) “அச்சதந்தெளித்தல்... To sprinkle a mixture of rice and cynodon grass, as on a newly married couple; அறுகும் அரிசியும் இடல்... "(Vol.I.p.24).

66

“அச்சுதந் தெளித்தல்... To sprinkle a mixture of rice and cyrodon grass, as on a newly couple; அறுகும் அரிசியும் இடுதல்... (Vol.I.p. 25).

இவற்றுள், அச்சுதந் தெளித்தல் என்னும் சொல்லுக்கு 'see அச்சதந் தெளித்தல்' என மாட்டெறிந்தாற் போதும். மீண்டும் முன்போல் விளக்கங் கூறவேண்டுவதில்லை.

அசாகளத்தனம், அஜாகளஸ்தனம் என்னும் சொற்கட்கும், இங்ஙனமே தனித்தனி முழு விளக்கங் கூறப்பட்டுளது.