உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

III வேர் வழுக்கள்

சென்னைப் ப.க.க.த. அகராதியின் முப்பெருங்குறைகளுள், மூன்றாவதும் தமிழைக் கெடுப்பதில் முதற்றரமானதும், மூலவழுவாம்.

1. தென்சொல்லை வடசொல்லெனல்

பொதுவாக, வடமொழியைப்பற்றி இறப்புவுயர்ந்த எண்ணமும், தமிழைப் பற்றி இறப்பத்தாழ்ந்த எண்ணமும் இருப்பதால், ஒரு சொல்லை வடசொல்லா தென்சொல்லா என்று ஆராயுமுன், வடமொழியின் வரலாற்றையும இயல்பையும் அறிந்துகொள்ளல் வேண்டும்.

வேத ஆரியர் நாவலந் தேயத்திற்குள் கால் வைத்த காலம் கி.மு. 2500. பண்டைக் குமரிக்கண்டத் தமிழர் கி.மு. 10,000 ஆண்டுகட்கு முன்பே. மொழி வளர்ச்சி முற்றிப் பல்துறை யிலக்கியம் படைத்து, நாகரிகப் பண்பாட்டில் நாயகம் பெற்றிருந்தனர். வேத ஆரியர் வேத காலத்திலேயே தமிழரோடு தொடர்பு கொண்டு, தம் மொழியைத் தமிழால் வளம்படுத்தி மெல்ல மெல்லத் தமிழர் கலைநூல்களையும் அதில் மொழிபெயர்த்துக் கொண்டனர். அங்ஙனம் மொழி பெயர்த்ததற்குப் போதிய சொல்வளம் வழக்கற்றுப் போன வேத ஆரிய மொழிக்கின்மையால், அதனொடு அக்காலத்து வட்டார மொழிகளாகிய பிராகிருதங்களைச் சேர்த்து, அமைத்துக்கொண்ட அரைச்செயற்கையான இலக்கியமொழியே சமற்கிருதமாம். அக்காலத்துப் பிராகிருத மொழிகளுள் தலைமையானது தமிழ். ஆகவே, சமய்கிருதத்தில் 2/5 பங்கு தமிழ்ச்சொற்களும் தமிழ் வேர்ச்சொற்களினின்று திரிந்த சொற்களுமா யிருக்கின்றன. வேதத்தி லேயே, அகவு, தா, சாயம் (சாயுங்காலம்), முத்தம் முதலிய நூற்றுக்கணக்கான தமிழ்ச்சொற்கள் உள்ளன. சமற்கிருதம் தேவமொழியென்னும் தவறான கருத்துப் பண்டைத் தமிழர் உள்ளத்திற் பதிந்துவிட்டதனால், ஆங்கிலேய ஆட்சி வாயிலாய் ஆங்கிலக் கல்வி ஏற்படும் வரை, பல தென்சொற்களையும் வடசொற்களென்று தமிழர் மயங்கியிருந்தனர். இன்று அம் மயக்கந் தெளிந்து வருகின்றது. ஆயினும், நீண்ட காலமாக அடிமைத்தனத்திற் கிடந்து ஊறிப் போனதினால், இன்றும் சில தமிழரும் தமிழ்ப் பேராசிரியரும் தன்னலங் கருதித் தமிழ் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை யிடுகின்றனர். எனினும் உண்மை அண்மையில் வெளியாம்.

சென்னை அகராதியில் அச்சன், அச்சு, அப்பம், ஆப்பம், அம் (ஆம், அம்பு, அம்பலம், அரக்கு, அரங்கு (அரங்கம்),அரசு, அரத்தம், ஆசிரியன், (ஆசிரியம்) ஆணி, ஆமைவடை, ஆயிரம், உவணம் (கவணம்), உவமை, உரு (உருவு, உருவம்,