உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

எல்லாச் சொற்கட்கும் மூலமாகக் காட்டுகின்றனர். ந்ருத் என்பதற்கு வேர்ப் பொருளே இல்லை. ஆயினும், முன்பு காட்டியதுபோல், ந்ருத் = ந்ருத்த (வ.) > நட்ட (பி.) > நடி (த.) எனத் தலைகீழாய்க் காட்டுகின்றனர். நடனம் என்பதை நட்டன(வ.) என்பதன் திரிபாகவும், நட்டணம், நட்டண என்பவற்றை நர்த்தன என்பதன் திரிபாகவும், காட்டுகின்றனர்.

>

ந்ருத் - ந்ர்த்த - நர்த்தந (வ.) நட்டணம் (த.) என்பது வடமொழியாளர்

கொள்கை.

அடி, கடி, பிடி என்னுஞ் சொற்கள் போன்றே, நடி என்பதும், தமிழில் ஆட்டம் என்னும் பொருளில் முதனிலைத் தொழிற்பெயராய் வழங்கும்.

"நடிகொள் நன்மயில் சேர்திரு நாரையூர்'

""

(தேவா. 216,5)

நடம் என்னும் தொழிற்பெயரினின்று, நடன் என்னும் ஆண்பாற் பெயரும் நடி (பிங்.) என்னும் பெண்பாற் பெயரும் தோன்றும்.

'வளிநடன் மெல்லிணர்ப் பூங்கொடி

(umflum. 22: 42.)

நடனம் என்னும் தொழிற் பெயரினின்று, நடனன் என்னும் ஆண்பாற் பெயரும் நடனி என்னும் பெண்பாற் பெயரும் தோன்றியுள்ளன.

நடனன் பாங்குற நடிப்பது"

'நடனியர் தம்மின் மன்னோ”

(இரகு: குடனயோத்தி: 98)

(இரகு. ஆற்று.20)

நடிகன், நடிகை என்னும் இருபாற் பெயரும், முறையே, natika, natika என்னும் வடசொற்களின் திரிபென்றும், இக்காலத்தனவென்றும், சென்னை யகராதியிற் குறிக்கப்பட்டுள்ளது.

nata, nataka என்பவை நடிகனைக் குறிக்கும் பெயர்கள் என்று மானி உல்லியம் அகராதியிலும், நடன், நடி என்னும் இரு தென்சொல்லும் nata, nati என்னும் வடசொல்லின் திரிபென்று சென்னை யகராதியிலும் குறிக்கப்பட் டுள்ளன.

ஒருவன் தன்னிடம் இல்லாததொன்றை இருப்பதாகக் காட்டிப் பாசாங்கு செய்யும்போது, கூத்தாடுகிறான் என்று சொல்லாமல் நடிக்கிறான் என்று சொல்வதையும், இவ் வழக்கு நாட்டுப்புற மக்கள் பேச்சிலும் தொன்றுதொட்டு இருந்துவருவதையும், ஊன்றி நோக்குக.