உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வேர் வழுக்கள்

35

IV. இலக்கண வழுக்கள்

1. இலக்கணக் குறிப்பு வழு

அக்கடாலெனல் ஓர் ஒலிக்குறிப்பு வெளிப்பாடு (Onomatopoetic Ex- pression) என்று குறிக்கப்பட்டிருக்கின்றது. அது ஓர் அசாவிடுதற் குறிப்பே (Exclamation of repose).

அகச்சுட்டு என்பது, சுட்டு முன்னொட்டு (Demonstrative prefix) அன்று; சுட்டடியே (Demonstrative base).

அஞ்சலப்பெட்டி, அஞ்சாரப்பெட்டி என்பவை அஞ்சறைப் பெட்டி என்பதன் கிளை வழக்கு வேறுபாடு (Dialectic variation) அல்ல; கொச்சைத் திரிபே. செய்யட்டும் என்னும் ஏவல் வினையில் அட்டும் என்பது வியங்கோள் விகுதியன்று; ஒரு துணைவினையே.

2. ஏவல் வினையின் எண் குறியாமை.

செய்யட்டு என்னும் ஏவல்வினை ஒருமையும், செய்யட்டும் என்னும் ஏவல் வினை பன்மையும் ஆகும்; செய்யவிடு, செய்யவிடும் என்பவை போல், இவ் வெண்வேறுபாடு அகராதியிற் குறிக்கப்படவில்லை.