உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

"மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா," (877) என்று கூறியதற்கு, சொற்களின் பொருட்கரணியத்தைக் கண்டுபிடிக்க முடியாதென்று பொருள் கொண்டார். தொல்காப்பியர் 'தோன்றா' என்று மட்டுங் கூறாமல், “விழிப்பத் தோன்றா” என்று கூறியுள்ளார். ஒருவனது பேசுந் திறனைக் குறிக்கும்போது, விரைவாய்ப் பேசமாட்டான் என்பதற்கும், பேசமாட்டான் என்பதற்கும் மிகுந்த வேறுபாடுண்டு. அங்ஙனமே, "தோன்றா' என்பதற்கும் "விழிப்பத் தோன்றா' என்பதற்கும் “விழிப்பத் தோன்றா” என்பது விளக்கமாய் அல்லது பார்த்தமட்டில் தோன்றாது என்றே பொருள்படும். ஆகவே, ஊன்றி நோக்கினால் தோன்றும் என்பதாம்.

,

ce

கன்னட டத்தில்

புடலங்காய் என்னும் தமிழ்ச்சொல். மலையாளங் படோலங்கா என்றும், சமற்கிருதத்தில் பட்டோலிக்கா என்றும் திரிந்து வழங்குகின்றது. சமற்கிருத வடிவிற்கு வேர்ப்பொருளே காண முடியாது. மலையாள வடிவிற்கு நீண்ட ஆராய்ச்சி செய்துதான் காண முடியும். தமிழ் வடிவிற்கோ, பார்த்தமட்டில் முடியாவிடினும், சற்று ஊன்றி நோக்கினால் எளிதாய் முடியும்.

புடலை+காய் = புடலங்காய். புடல்-புடலை. ஒ.நோ. குழல்-குடல். பிற காய்கள் போல் கட்டியாயிராது புழலாய் (உட்டுளையுள்ள காய்) இருப்பது புடலங்காய்.

"விழிப்பத் தோன்றா” என்பது 'தோன்றா' என்றே பொருள்படுவதாயின், ‘எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே” (640) என்று வேறோரிடத்தில் அவரே எங்ஙனம் முரண்படக் கூறியிருக்க முடியும்? இதைக்கூடப் பதிப்பாசிரியர் எண்ணிப்பார்த்திலர்.

மேலும், பழம் பாண்டிநாடான குமரிக்கண்டம் முழுகிப் பண்டைத் தமிழிலக்கிய மெல்லாம் இறந்துபட்டு ஆயிரக்கணக்கான சொற்கள் மறைந்து, பண்டைக் கழகத்தின் பின் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டு கழிந்துள்ள இற்றை நிலையிலும், நூற்றுமேனி 75 சொற்கட்கு வேர்ப்பொருள் காணலாமெனின், கி.மு. 7 நூற்றாண்கட்கு முற்பட்ட தொல்காப்பியர் காலத்தில் தமிழ்ச்சொற்கட் கெல்லாம் வேர்ப்பொருள் காணும் வாய்ப்பு எத்துணை மிகுதியா யிருந்திருக்கும்.

6. புலாலுணவறியாமை

தலைமைத் தமிழ்ப் பண்டிதரும் பதிப்பாசிரியருமாகிய இருவரும் மரக்கறி உணவினர். அதனால், ஊனுணவுப் பொருள்களை, தாமாக அறியவோ, பிறர் அவற்றைப்பற்றித் தவறாயெழுதின் அத் தவற்றைக் கண்டுபிடிக்கவோ, ஆற்ற லிலராயினர். அதனாலேயே, குறவையை வராலென்றும், வராலைக் கொண்டை யென்றும், மண்ணீரலைக் கல்லீரலென்றும், கொழுப்புக் குடலைச் சிறுகுட லென்றும், தம்போல்வார் எழுதியனுப்பியதை எழுதியபடியே அச்சிட்டுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதி இத்துணைச் சீர்கேடடை தற்கு, அவ் வகராதிக் குழுத்தலைவரும் உறுப்பினரும் ஓரளவு

கரணியம்