உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




54

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

சொற் பிறப்பியல் அகரமுதலித் தொகுப்பிற்கு நானே தக்கவனென்று பெருமுழக்கம் செய்தார். ஆயினும், திரு. நாராயணசாமி அவர்கள் பேரா. சேது அவர்கள் கீறின கோட்டைத் தாண்ட விரும்பவில்லை.

பேரா. சேது அவர்கள் என்மீதும் தனித்தமிழிலும் பற்றற்றவர் என்பது எனக்கு முன்னரே நன்றாய்த் தெரியும். அதோடு, அண்ணாமலை நகரில் நடைபெற்ற கீழைக்கலை மாநாட்டில் பேரா.தெ.பொ.மீ. யொடு நான் கருத்து வேறுபட்டமையும் என் அமர்த்தத்திற்குப் பெருந்தடையாம் என்று சிலர் பேசிக் கொண்டனர்.

வேண்டுகோள் விடுத்து அரையாண்டாயிற்று. எத்தகை விளைவும் நேர்ந்திலது. முப் பேராசிரியர் முரண்டுகொண்டு எனக்கு முட்டுக்கட்டை யிடுவதாக, செவிச்செய்திகள் வானில் உலாவின.

அண்ணாமலை

இந்நிலையில், காலஞ் சென்ற பண்டகர் வரதராசலு அவர்கள் சேலம் வந்து, பண்டகர் இராசாராம் வளமனையில் விருந்தினராகத் தங்கினார்கள். அப்பொழுது பின்னர் (பண்டகர் இராசாராம்) பல்கலைக்கழக வேலையைப்பற்றியும் என்னைப்பற்றியும் முன்னவரிடம் எடுத்துரைத்தார். முன்னவரும் ஆவன செய்வதாகச் சொன்னார்.

அமர்த்தப் படலம்

பண்டகர் வரதராசலு அவர்கள் சென்னை சென்றபின் அரசவயவர் முத்தையா அவர்கள் திருமுகம் வந்தது. அதன் பின், யான் அண்ணாமலைநகர் செல்லும் நாள் அண்ணணித்தென்று எண்ணினேன்.

அரசவயவர் முத்தையா அவர்கள் தங்கள் தந்தையார் போன்றே தமிழ்ப்பற்று நிரம்பியவர்கள். ஆயின், பண்டாரகர் சேதுவும் பேராசிரியர் தெ.பொ.மீ.யும் (வேறொரு பிராமணப் பேராசிரியரும்) முத்தமிழ் வேங்கையரென்று கருதப்பட்டதனாலும், துணைக்கண்காணகர் திரு. நாராயணசாமி அவர்களின் அதிகார உரிமை மதிக்கப்பட வேண்டியிருந்ததனாலும் உடனடியாய் என்னை அமர்த்த விரும்பவில்லை. அதே சமயத்தில், அறிக்கழஞ்சு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் இருவரும் அரசியற் கட்சித் தலைவர் ஒருவரும் கூறிய பரிந்துரையைப் பொருட்படுத்தாதிருக்கவும் இயலவில்லை. இங்ஙனம் இருதலைக்கொள்ளி எறும்புபோல் இடர்ப்பட்டதனால், நீண்டநாளாக என்னை அமர்த்துவது அறத்தடுமாற்றமாகவே யிருந்தது.

இந்நிலையில், அண்ணாமலை பல்கலைக்கழகக் கீழைக் கலைத்துறைத் தலைவரும் அருந்தமிழன்பரும் பெரும்பொறுப்பாளருமான பேராசிரியர் இலெ.பெ.கரு. இராமநாதன் அவர்களின் கருத்தை அரசவயவர் முத்தையா அவர்கள் கேட்டிருக்கின்றனர். பேராசிரியர் முற்றும் இசையவே, அரசவயவர் தடுமாற்றந் தீர்ந்திருக்கின்றது. அதன்பின் துணைக் கண்காணகரை

ணக்குவதும் எளிதாயிருந்திருக்கின்றது. இச் செய்திகள் முன்பு எனக்கு மறைவாயிருந்து பின்பு வெளிப்படுத்தப்பட்டன.