உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




60

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

அமைக்கப்பட்ட குழுவில் திரு. கொரடா இராமகிருட்டிண ஐயாவும் திரு. நாராயண மேனனும் இடம்பெறவில்லை. சென்னை மண்டலக் கல்லூரிச் சமற்கிருதப் பேராசிரியர் திருஞானசம்பந்தனார் (எம்.ஏ.) ஒரு புத்துறுப்பின ராயினர்.

மொழிநூல் துறையின் முதற்பணி தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் தொகுப்பென்று விளம்பரஞ் செய்யப்பட்டிருந்ததேனும், குழு ஆற்றுப்படுத்திய வாறே என் பணி நடைபெறல் வேண்டுமென்று அமர்த்தோலைப் பின்னிணைப்பிற் குறிக்கப்பட்டிருந்ததால், குழுக்கூடும் வரை அப் பணியிலீடுபட என்னால் இயல வில்லை. ஆராய்ச்சித்துறைக் கூடத்தில் மொழிநூல் துறைக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடமும், ஒரு நாற்காலியும், ஒரு நிலைமேடையும் (மேசையும்) தவிர வேறொன்றுமில்லாமலும், ஒரு நெடும்பக்கம் மறைப்பின்றியும் இருந்தது.

பன்னாட்பின் 8-4-1957 அன்று, அண்ணாமலை பல்கலைக்கழகத் திராவிட மொழிநூல் துறைத் தொடக்கக் கூட்டம் நடைபெற்றது. பேரா. தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் தவிர உறுப்பினர் அனைவரும் வந்திருந்தனர். தலைவர் பர். சட்டர்சி விரிவான தலைமையுரையொன்று நிகழ்த்தினார். கூட்டம் முழுதும் ஆங்கிலத்திலேயே நடைபெற்றது. செயலாளர் என்ற முறையில், நான் ஒர் அறிக்கை எழுதிப் படித்தேன். தலைவர் தம் உரையிடையே “ஒவ்வொரு நாட்டிலும் நாகரிகம் அந் நாட்டு மொழியோடு தொடர்புள்ளது. இந்திய நாகரிகமெல்லாம் சமற்கிருத இலக்கியத்திலேயே எழுதப்பட்டுள்ளது. ஆதலால் இந்திய நாகரிகம் ஆரியரதே என்று கூறியதால், என் அறிக்கையையொட்டி, "இந்திய நாகரிக மெல்லாம் முதன் முதல் தமிழிலக்கியத்திலேயே எழுதப்பட்டிருந்தது. அவ் விலக்கியம் முழுதும் இறந்துபட்டபின், அதன் மொழிபெயர்ப்பான சமற்கிருத இலக்கியமே மூலம்போற் காட்சியளிக்கின்றது. ஒரு புகைவண்டி வழிப்போக்கன் கையிற் சீட்டில்லாவிடின், அம்மட்டிலேயே அவன் சீட்டு வாங்காமற் செல்பவன் என்று முடிவு கொண்டு விடமுடியாது. ஒருகால் சீட்டுத் தவறிப் போயிருக்கலாம்; அல்லது அடுத்தவன் திருடியிருப்பான்” என்றுரைத்து அவர் என்றுரைத்து அவர் கூற்றை மறுக்க வேண்டியதாயிற்று.

66

கூட்டம் முடிந்தபின், பர். சட்டர்சி புன்னகையுடன், 'திருவாளர் தேவநேயரீர்! நீர் அந்தச் சீட்டைக் காட்ட வேண்டும்” என்று விளையாட்டாகவும் வினையாகவும் சொன்னார். "நான் சீட்டுக் காட்டமுடியாது; ஆயின், சீட்டு வாங்கியதற்குச் சான்று காட்டமுடியும்” என்று செப்பினேன். அவர் உள்ளத்திற் கள்ளமற்றவர்தாம். ஆயின், தமிழைப்பற்றி அவருக்குத் தெள்ளிய அறிவில்லை. இதற்குத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியரே பொறுப்பாளர். பர். சேதுவோ, 'இனிமேல் அந்தப் புகைவண்டிச் சீட்டுவமையை எங்கும் சொல்லாதீர்கள்' என்று நல்லது சொல்வதுபோல் எச்சரித்தார். பர். கத்தரே என்னைப்பற்றிய கருத்தை உள்ளத்தில் மறைவாய் வைத்துக்கொண்டார்.

அன்று எற்பாடு (சாயுங்காலம்), பர். சட்டர்சியைச் சிறப்பிக்க ஒரு சிற்றுண்டி விருந்து நடந்தது. அதில் அவரைப் பாராட்டிப் பேசிய பர். சேது, அவர்