உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




என் அண்ணாமலை நகர் வாழ்க்கை

61

தம் பெயரை ‘நன்னெறி முருகன்' என்று குறிப்பிடுவர் என்றும், தமிழ்ப்பற்று நிரம்பியவர் என்றும், சிறப்பாய்க் குறிப்பிட்டார். அதன் உட்குறிப்பு மொழிநூல் பற்றிய அவரது நடுநிலை முடிபே கொள்ளத்தக்கதென்றும், தமிழ் வெறியால் தேவநேயன் கூறுவது தள்ளத்தக்கதென்பதுமே. 'தமிழ் கெடினும் கெடுக; தேவநேயன் பெயர் ஓங்கக் கூடா’ தென்பதே அவர் குறிக்கோள்.

பர். சட்டர்சிக்குத் தமிழ் தெரியாது. அதிற் பேசவோ எழுதவோ அவருக்கு இயலாது. தமிழைப்பற்றி ஆங்கில நூல் வாயிலாகவே கற்றவர். சுநீதி குமார் சட்டர்சி என்னும் தம் பெயரின் முன்னிரு சொற்களை மட்டும் நன்னெறி முருகன் என்று மொழிபெயர்த்து, அவற்றைத் தமிழெழுத்திற் குறிக்கக் கற்றிருக்கின்றார். நெறி என்பது வழி அல்லது விதி. நீதியைக் குறிக்க அதினுஞ் சிறந்த சொற்கள் நயம், நேர்மை என்பன. குமார் என்பது குமரன் (=முருகன்) என்னும் தென் சொல்லின் திரிபே. ஆயின், முருகன் ஆரியத்தெய்வம் என்பது, முருகன் என்பது சுப்பிரமணியன் என்னும் வடசொல்லின் மொழிபெயர்ப்பென்பதும் அவர் நம்பிக்கை. தமிழை ஆங்கில வாயிலாய்க் கற்றதினால், சில தமிழ் நூற்பெயர் களைக்கூட அவர் சரியாய் ஒலிப்பதில்லை. பத்துப்பாட்டு என்பதைப் பத்துப்பத்து என்று அண்ணாமலை நகரில் ஒரு முறை படித்தார். வேறிடங்களில் பட்பட் என்றும் பட்டுப்பட்டு என்றும் படித்ததாகக் கேள்வி.

தொடக்கக் கூட்டத்திற்கு மறுநாட்காலை குழுக்கூட்டம் நடைபெற்றது. அதிற் பின்வருமாறு முடிவுகள் செய்யப்பட்டன:

1.

2.

3.

4.

பரோ என்னும் ஆங்கிலப் பேராசிரியரையாவது, எமனோ என்னும் அமெரிக்கப் பேராசிரியரையாவது அண்ணாமலை பல்கலைக்கழக மொழிநூல் துறைப் பேராசிரியராக அமர்த்தல் வேண்டும். வாசகராகவிருக்கும் ஞா. தேவநேயனார் தாம் தொகுக்கவிருக்கும் தமிழ்ச்சொற் பிறப்பியல் அகரமுதலியின் போலிகையாக, முதற்கண் யாவேனும் ஐம்பது சொற்கட்கு எழுதிக் காட்டல் வேண்டும். அதற்குக் கையாளும் நெறிமுறைகளையும் குறிப்பிடல் வேண்டும்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்மொழிக்கும் ஒவ்வொரு விரிவுரையாளரை அமர்த்தல் வேண்டும்.

கழக (சங்க) இலக்கியத்தை ஒவ்வொரு நூலாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் வரிபெயர்த்தும், பொருளும் மொழியமைதியும் அயலார்க்கு விளங்குமாறு வெளியிடுதல் வேண்டும்.

குறிப்பு : இதற்கு முந்திய கட்டுரை முழுதும் நினைவிலிருந்தெழுதியதால், குழுவமைப்பையும் அதன் உறுப்பாண்மையும் பற்றிய சில செய்திகள் பிறழக் கூறப்பட்டுள்ளன. இக் கட்டுரையிற் கூறப்பட்டுள்ளனவே சரியெனக் கொள்க.