உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




என் அண்ணாமலை நகர் வாழ்க்கை

69

முருகன் என்று மொழிபெயர்த்துக் கொண்டனரென்று பர். சட்டர்சி கூறியிருக் கின்றார். அதை ஒருவரும் ‘எதிர்க்காததினாலேயே, அண்மையிற் பேரா. நீலகண்ட சாத்திரியார் முருகன் ஆரியத் தெய்வமென்று கூற முனைந்திருக்கின்றார்.

ஸகஸ்ர என்பது ஆயிரம் என்றும், பிராமண என்பது பார்ப்பான் என்றும், கன்யகா என்பது கண்ணகி என்றும், ஸ்தூணா என்பது தூண் என்றும், லோக என்பது உலகம் என்றும், த்ரோணீ என்பது தோணி என்றும், ஸ்நேக என்பது நேயம் என்றும் திரிந்தனவென்றும்; விஷ்ணு, குமார, துர்கா என்பவற்றை, முறையே, மால் அல்லது மாயோன், முருகன் அல்லது சேயோன், கொற்றவை என்றும் திரிவர்க என்பதை முப்பால் என்றும், தர்ம, அர்த்த, காம, மோக்ஷ என்பவற்றை அறம், பொருள், இன்பம், வீடு என்றும், தமிழர் மொழிபெயர்த்துக் கொண்டனரென்றும், அவர் கிரேக்க நாட்டினின்று வந்தவரென்றும், கலவை மொழியாரும் கலவை இனத்தாரும் கலவை நாகரிகருமாவார் என்றும்; கூறிய பின், தமிழ் என ஒரு மொழி உளதோ? தமிழன் என ஓர் இனவன் உளனோ? தமிழாசிரியரும் தமிழ் மாணவரும் தமிழன்பரும் கருதிக் காண்க.

பர். சட்டர்சியின் கட்டுரைப் படிகள் சில பெற்றுத் தமிழ்ப்பற்றுள்ள தமிழ்ப் புலவர் சிலரிடமும் தமிழன்பர் சிலரிடமும் காட்டினேன். அவருட் சிலர் வருந்தினர்; பலர் அதுவுமில்லை. மேற்கொண்டு சில படிகள் கேட்டபொழுது கிடைக்கவில்லை. அண்ணாமலை பல்கலைக்கழகப் பதிவாளரால் அது பரவுவது தடுக்கப்பட்ட தென்று தெரிந்தது. அதன் பின் நான் நேரிற் சென்று பதிவாளரிடம் கேட்டேன். அவர்கள் “வேண்டியவர் எனக்கு நேராக எழுதிப் பெற்றுக் கொள்ளட்டும்” என்று

சொல்லிவிட்டார்கள்.

சில மாதம் பொறுத்து, பர். சட்டர்சி அண்ணாமலை நகர் வந்து நான் தொகுக்கவிருந்த செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியின் போலிகையான, ஐம்பான் சொல் விளக்கச் சுவடியைப் பார்வையிட்டனர்.

எடுத்த அடியிலேயே, தமிழர் குமரிக்கண்டத்தினின்று வந்தவரென்னும் உண்மை வரலாற்றுக் கூற்றையும், அச்சன் என்பது அத்தன் என்னும் தென்சொல்லின் திரிபென்னும் சொல் வரலாற்றையும் அவர் ஒப்புக்கொள்ள மறுத்தனர். “நீ தன்னந்தனியாகப் போர் புரிகின்றாய்” (You are fighting a lonely fight) என்றார்.

புறநானூறு, கலித்தொகை, சிலப்பதிகாரம், அடியார்க்குநல்லார் உரை, இறையனார் அகப்பொருளுரை முதலியவற்றினின்று குமரி நாட்டுச் செய்திக்குச் சான்று காட்டி, பர். சாமிநாதையர், பேரா. மு. இராகவையங்கார் முதலியோரும் முக்கழக வரலாற்றை ஒப்புக்கொண்டதாகவும் கூறினேன். ஆயினும், அவர் கருத்து மாறவில்லை. இதைப்பற்றி விரிவாக எழுதி அவருக்கனுப்ப வேண்டு மென்று மட்டும் சொன்னார்.

அத்தன், அத்தி என்பன முறையே தந்தையையும் தாயையும் குறிக்கும் தென்சொல்லென்றும்; அவை அச்சன் அச்சி என்று திரியுமென்றும்; தகரம்