உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

சகரமாகத் தமிழில் திரிவது இயல்பென்றும்; அப்பன் அம்மை என்பன கண்ணப்பன் கண்ணம்மை என்பவற்றில் வருவதுபோல். அத்தன் அத்தி; அச்சன் அச்சி என்னும் தந்தை தாய் பெயரும் ஆண்பால் பெண்பாலீறாய் வருமென்றும்; வண்ணாத்தி தட்டாத்தி என்பவற்றில் அத்தி என்பதும், மருத்துவச்சி, வேட்டு வச்சி என்பவற்றில் அச்சி என்பதும், பெண்பாலீறென்றும்; கூறியபொழுது, இது போல் தகரம் சகரமாகத் திரியும் வேறொரு சொல் சொல் என்றார் பர். சட்டர்சி. நான், நத்து நச்சு என்னும் திரிபைச் சென்னைப் பல்கலைக்கழக தமிழ் அகர முதலியில் எடுத்துக் காட்டினேன். அவர் “ஒரு மரம் தோப்பாகாது” (“One swallow cannot make a summer”) என்றார். நான் இன்னுமுளதென்று காட்டப் புகுமுன் “எனக்கு நேரமாயிற்று. எல்லாவற்றையும் பற்றி விரிவாக யெழுதி எனக்கு நேரே காளிக்கோட்டத்திற் கனுப்பு” என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டார்.

அடுத்து, தெலுங்கிற்குத் திரு. மகாதேவ (சாத்திரியா) ரும் (எம்.ஏ.), கன்னடத்திற்குத் திரு. பதுமநாபனும் (எம்.ஏ.) விரிவுரையாளராக அமர்த்தப் பெற்றனர்.

துறை மாற்றப் படலம்

பர். சட்டர்சி, என் கருத்துவேறுபாட்டிற்கு விரிவாகச் சான்றுகாட்டி வரைந்தனுப்ப வேண்டுமென்று சொல்லிவிட்டுச் சென்றாரேனும். தமிழர் கிரேக்க நாட்டுப் பாங்கரிலிருந்து வந்தவரென்றும், தமிழநாகரிகம் பன்னாகரிகக் கலவை யென்றும். திண்ணிய முற்கோளுடையவராதலின். எத்துணைச் சான்று காட்டினும் என் கொள்கையை ஏற்கும் நடுநிலை அவர்க்கில்லையென்பது. எனக்குத் தெரிந்துவிட்டது. பேரா. லெ. பெ. கரு. இராமநாதன் அவர்கள் என்பா லுள்ள அன்பால் நான் பர். சட்டர்சிக்குக் காட்டவேண்டிய போலிகைச் சொற்பட்டியில். எள்ளளவும் கருத்து வேறுபாட்டிற்கும் ஐயுறவிற்கும் மறுப்பிற்கும் தருக்கத்திற்கும் இடந்தராத ஐம்பது சொற்களையே சேர்க்கவேண்டுமென்று அறிவுரை கூறினார்கள். ஆயின், நான் அஃதை ஏற்றுக்கொண்டிலேன். தமிழைப் பற்றிய உண்மையை எடுத்துச் சொல்ல ஏன் அஞ்சவேண்டும்? இங்ஙனம் எத்தனை நாளைக்கு அஞ்சியஞ்சி அடிமைத்தனத்திலும் அறியாமையிலும் தமிழன் மூழ்கிக்கிடப்பது! ஆரியச்சார்பினர் கருங்காக்கையை வெண்காக்கை யென்று எத்தனை துணிச்சலோடும் திடாரிக்கத்தோடும் கூறிவருகின்றனர்!

அண்ணாமலை பல்கலைக்கழகத் திராவிடமொழி நூல் துறைத் திறப்பு விழாவிற்குப்பின், பர். காட்டிரே நெடுகலும் என்னைப்பற்றித் தீதாய்ப் பல்கலைக் கழக அதிகாரிகட்கு எழுதி வந்ததும். என் செவிக்கெட்டிற்று. துணைக் கண் காணகர் திரு. நாராயணசாமியார் அவர்களும். பல்கலைக்கழகப் பொதுக்கூட்டங் களில். “அமெரிக்கா சென்றிருக்கும் திரு. சண்முகனார் பயிற்சி முடிந்து திரும்பிவந்தபின் திராவிட மொழிநூல் துறை மிகச் சீர்ப்படும்” என்று சொல்வது வழக்கம். எனக்குத் திரு. சண்முகனாரைப்பற்றி ஒரு வருத்தமுமில்லை.