உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் பெயர் என்சொல்?

ஆரியம் :

கேலிக்கம் (Gaelic) - teire

வேலிசு (Welsh) - tan

பாரசீகம் (Persian) - tigh

2. நேயன்

நள் : நள் - நண் - நண்பு - நட்பு.

91

நள்ளுதல் = அடைதல், பொருந்துதல், நட்புக் கொள்ளுதல், செறிதல்.

நள்ளார் = பகைவர்.

நள்ளி = உறவு (சூடா.).

நள்ளிருள் = செறிந்தவிருள் (திருக்கோ. 156, சிலப். 15 : 105)

நள்ளுநர் = நண்பர் (திவா.).

நள் - நளி. நளிதல் = செறிதல்.

நள் - நெள் - நெய் = ஒட்டும் நீர்ப்பொருள் (oil, ghee),

கருப்புக்கட்டிச் சாந்து.

நெய்தல் = இணைத்தல், நூலை இணைத்து ஆடையாகச் செய்தல். நெய் = குருதி, நெய்த்தோர் (நெய்த்துவர்?)

அகரம் எகரமாதலை, பரு - திரிபுகளிற் காண்க.

=

குருதி,

பெரு, சத்தான் செத்தான் என்னும்

ளகர மெய்யீறு யகர மெய்யீறாவதை, கொள் - கொய், தொள் - தொய், பொள் - பொய் முதலிய திரிபுகளிற் காண்க.

நெய் (நெய்ஞ்சு) நெஞ்சு நெஞ்சம் = விலாவெலும்புகள் இணைக்கப்பட்ட இடம் அல்லது அன்பிற்கிடமாகக் கருதப்படும் நெஞ்சாங்குலை (Heart) உள்ள இடம்.

நெய் - நேய் நேயம் = அன்பு.

ஈரம், பசை முதலிய சொற்கள் ஒட்டும் பொருளையும் அன்பையும் குறித்தல் காண்க. அன்பு, இருவரை அல்லது பலரை இணைப்பது.

நேய் - நே = அன்பு. நேயம் - நேசம்.

ய - ச. ஒ.நோ: நெயவு - நெசவு.

நேசம் - நேசி. நேசித்தல் = அன்பு கடாத்தல் விரும்புதல்.

"நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்” (தாயுமானவர்)

நேயம் - நேயன். நேசம் - நேசன்.

நேயம் என்னும் தென்சொல் வடநாட்டுத் திரவிடத்தில் வழங்கி, பின்னர்ப் பிராகிருதத்திலும் தொடர்ந்து, இறுதியில் சமற்கிருதத்திற் புகுந்து