உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

தென்சொற் கட்டுரைகள்

ஏகாரம் ஈகாரமாய்த் திரிதலை, தேன் - தேம் – தீம் என்னும் திரிபிலும் கண்டுகொள்க.

-

தேய் - தேயு (சமற்கிருதம்) = நெருப்பு.

இத் 'தேய்' அடியினின்றே தெய்வப்பெயர் தோன்றிற்று.

தேய் - தேய்வு - தேவு - தேவன்,

-

தேய்வு - தெய்வு - தெய்வம்.

தேவு - தே = தெய்வம், தலைவன்,

"பால்வரை தெய்வம் வினையே பூதம்” (தொல். 541) "தெய்வம் உணாவே மாமரம் புட்பறை” (தொல். 964). "தெய்வம் அஞ்சல் புரையறந் தெளிதல்" (தொல். 1218) “வழிபடு தெய்வம் நிற்புறங் காப்ப” (தொல். 1367).

யகரவொற்றுள்ள தெய்வப் பெயரே பெரும்பான்மையாகவும், "தேவர்ப் பராஅய முன்னிலைக் கண்ணே” (தொல். 1395)

என வகரவொற்றுள்ள பின்னை வடிவு அருகியும், இதுபோதுள்ள தமிழ்நூல்களுள் முந்தியதாகிய தொல்காப்பியத்துள் வருதல் காண்க.

சமற்கிருதம் – deva, daiva

இலத்தீன் – dues = god.

கிரேக்கம் (Greek) - theos = god.

‘தேவ' என்னும் சொற்குச் சமற்கிருதத்திற் காட்டப்படும் div (to be bright). di, dip (to shine) என்னும் வேர்ச்சொற்கள் முதற்பொருளன்றி வழிப்பொருளே கொண்டுள்ளமையின் பொருந்தாமை காண்க.

பின்வரும் சித்திய (Scythian) ஆரியச் சொற்கள், 'தீ' (நெருப்பு) என்னும் தமிழ்ச்சொற்கு இனமானவை எனக் கால்டுவெல் கண்காணியார் காட்டுவார்.

சித்தியம்:

சாமாயிதே (samoiede) - tu, tui, ti, ty.

மஞ்சு (Manchu) - tua.

அங்கேரியம் (Hungarian)

ஓசுத்தியக்கு (Ostiak) – tut.

துங்கசு (Tungus) - togo.

tuz.

இலசுக்கியம் (Lesghian) - tze, zi, zie.