உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என் பெயர் என்சொல்?

உர்: உர்

உரு. உருத்தல் = அழலுதல்.

89

ஆகம் உருப்ப நூறி” (புறம். 25 : 10)

ரு உரும் உரும்பு = கொதிப்பு.

"உரும்பில் கூற்றத் தன்ன" (பதிற்றுப். 26 : 13).

உரு

உருமம் = வெப்பம். நண்பகல்.

உருமகாலம் = கோடைகாலம்.

உருமித்தல் = புழுங்குதல்,

=

உரு - உருப்பு வெப்பம்.

"கன்மிசை உருப்பிறக் கனைதுளி சிதறென” (கலித். 16 : 7)

உருப்பு உருப்பம் = வெப்பம்.

“கனலும்....... ........ உருப்பமெழ” (அரிச். பு. விவா. 104)

உரு உருகு உருக்கு உருக்கம்.

=

உருகுதல் வெப்பத்தினால் இளகுதல், மனம் இளகுதல் (இரங்குதல்). உருக்கு = உருகின இரும்பு (எஃகு).

உருக்காங்கல் = உருகிப்போன செங்கல்.

உர் - உரி = நெருப்பு (கன்னடம், துளுவம்).

உரி என்னும் வடிவம் தமிழில் வழக்கற்று மறைந்தது.

உரி எரி

=

நெருப்பு.

நெருப்பைக் குறிக்கும் 'உரு' வேர் தமிழ்ச்சொற்கள் பிறமொழிகளிலும் சென்று வழங்குகின்றன.

இலத்தீன் (Latin) - உர், (to burn)

அர்மீனியம் (Armenian) ஓர் = நெருப்பு.

ஆபுக்கானியம் (Afghan) - ஓர், வுர் = நெருப்பு.

எபிரேயம் (Hebrew) ஊர் = நெருப்பு, ஓர் = ஒளி.

நெர்: நெர் - நெரி - நெரிதல் = நெருங்குதல், உரசுதல், நொறுங்குதல். நெர் – நெரு - நெருப்பு. நெருப்பு -நிப்பு (தெலுங்கு).

அரபியம் (Arabic) - நார் = நெருப்பு, நூர் = ஒளி.

தேய்: தேய்தல் = உரசுதல்.

தேய் - தீய் - தீ = நெருப்பு, விளக்கு, நரகம்.

தீ - தீமை = தீயின்தன்மை. தீ. தீய = கொடிய,

தீய்தல் = எரிந்துபோதல், கருகுதல், பற்றிப்போதல், தீதல் = தீய்தல்.