உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

கருமம் தமிழ்ச் சொல்லே!

கருமம் என்பது, குமரிக் கண்டத்தில் கரு என்னும் முதனிலை யினின்று தோன்றித் தொன்றுதொட்டுத் தமிழில் வழங்கிவருவதும், அடிநாளில் ஐரோப்பா சென்ற தமிழர் அல், திரவிடர் மொழியிற் கலந்திருந்ததுமான தூய தமிழ்ச் சொல்லாகும்.

கருமம் = செயல், தொழில், கடமை. R.V. karman

கரு கருமை - கருமம்.

ஒ.நோ : பரு பருமை

பருமம்.

உவ

உவமை உவமம்.

மகரவீற்றுப் பெயர்கள் தமிழிலும் னகர வீறாகத் திரிதலுண்டு.

-

எ-டு : பருமம் - பருமன். உவமம் - உவமன்.

கரு-த்தல் = செய்தல். இது வழக்கற்றுப் போன தமிழ் வினைகளுள் ஒன்றாம். அட்டு, பொட்டு, கள், நன் முதலிய பல வினைகள் வழக்கற்றுப் போனமை காண்க.

அட்டுதல் = வார்த்தல்

பொட்டுதல்

=

பொருத்துதல், கட்டுதல்

பொருத்து - பொத்து பொட்டு

பொட்டு + அணம் பொட்டணம்.

ம்

ஒ.நோ: கட்டு + அணம் = கட்டணம்

கட்டல் = = களவு செய்தல். கள்ளாமை = களவு செய்யாமை. நட்டல் = நட்புச் செய்தல்.

ஒருபொருள் பற்றிப் பல சொல்லியிருப்பின், அவற்றுள் ஒன்றும் சிலவும் வழங்கப்படாமற் போதல் இயல்பே.

கரு-த்தல் என்னும் சொற்கு இருவகையில் வேர்ப் பொருள் கூறலாம்.

1.

=

கருமை பெருமை (திவா.), மிகுதி. கடு - கரு.

கடுத்தல் = மிகுதல். “நெஞ்சங் கடுத்தரு” (குறள். 706)

=

கருத்தல் முன இல்லாத தொன்று மிகுமாறு செய்தல், செய்தல்.