உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருமம் தமிழ்ச் சொல்லே

97

ஆங்கிலத்தில் make என்னும் சொல்லிற்கு, இதே கருத்தில், magnus (L), megas (Gk.) என்னும் சொற்களின் mag என்னும் வேரையே மூலமாகக் காட்டுதல் காண்க.

கருமம் - கம்மம். (> Pkt. kamma) = 1. கம்மியர் தொழில், smith's work 'கம்மஞ் செய் மாக்கள்' (நாலடியார், 393) 2. உழவுத் தொழில். கம்மவார் (கம்மம் + அவர்) - உழவுத் தொழில் செய்யும் ஒரு தெலுங்க வகுப்பார்.

கம்மம் - கமம் = உழவுத் தொழில்.

நாகரிக வுலகில் முதன் முதல் ஏற்பட்ட கைத்தொழில் உழவுத் தொழிலே. அதனால், திருவள்ளுவர் உழவரைக் “கைசெய்தூண் மாலை யவர்” (1035) என்றார்.

கமம் - கம் = 1. உழவுத் தொழில்.

2. கம்மியர் தொழில், “ஈ முங் கம்மும்” (தொல். எழுத். 328) கம்மாலை = 1. எருது பூட்டியிருக்கும் இறைவை யேற்றம்.

2. கன்னார் தொழிற்கூடம்.

கம்மாலை

கமலை

கவலை.

கமலை என்பது பாண்டி நாட்டு வழக்கு. கவலை என்பது சோழ கொங்கு நாட்டு வழக்கு.

கன்னட தெலுங்கு மொழிகளில் (சிறப்பாகக் கன்னடத்தில், வகரம் பகரமாகத் திரிவதால், கவலை என்பது அவ்விரு மொழிகளிலும் கபிலெ (kapile) எனத் திரிந்து வழங்குகின்றது. இதைக் குராற் பெற்றத்தைக் குறிக்கும் கபிலா என்னும் வடசொல்லோடு மயக்கி, (கவலையேற்றத்தைக் கபிலையேற்றமாகக் கொண்டு) கபிலை எனக் குறித்துள்ளனர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகராதியாளர். முதலாவது, கபிலையென்று தமிழ்நாட்டில் ஓரிடத்திலும் வழங்கவில்லை. இரண்டாவது, கபிலை என்பது கபில நிறமுள்ள பெற்றம் (பசு.) கமலையில் காளைகளைக் கட்டி நீரிறைப்பரே யன்றிப் பெற்றங்களைக் கட்டி யிறையார்.

கமலை வண்டி, கமலையுருளை, கமலைவடம், கமலைக்குழி முதலிய பலசொற்கள் கமலை யிறைவையொடு தொடர்புள்ளவை. இவற்றை மேற்குறித்த அகராதியாசிரியர் அறவும் அறிந்திலர்.

பண்ணுதல் என்னும் சொல்லும் இதே கருத்தடிப்படையில் அமைந்ததாகத் தோன்றுகின்றது. பண் - பண்ணை = கூட்டம், பெருங்கூட்டம், தொகுதி, மிகுதி.

2. கருத்தல் = கை கருக்குமாறு ஒரு வினை செய்தல், செய்தல்.

தொடர்ந்து வேலை செய்வதனால், கரு நிறத்தார் கை கருப்பதும் பொன்னிறத்தார் அல்லது வெண்ணிறத்தார் கை சிவப்பதும் இயல்பு. 'செய்த கை சேவேறும்' என்பது பழமொழி. சேவு சேகு = செவ்வயிரம்.