உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13

சமற்கிருதவாக்கம் - சொற்கள்

வேத ஆரியர் நாவலந்தேயம் அல்லது நாவலம்பொழில் என்னும் இந்தியாவிற்குட் புகுந்தபோது, இங்கிருந்த இலக்கியம் தமிழிலக்கியமே. அவர் இந்திய நாகரிகம் தமதெனக் காட்டித் தம்மைக் குமுகாய (சமுதாய) நிலையில் உச்ச நிலைக்கு உயர்த்துவான் வேண்டி, தமிழ்நூல்களை மொழி பெயர்த்து ஓர் இலக்கியத்தை அமைத்தற்குப் போதிய சொல்வளம் தம் முன்னோர் மொழிக்கின்மையால் ஆயிரக்கணக்கான சொற்களைத் தமிழினின்று கடன் கொள்ள வேண்டியதாயிற்று. இங்ஙனங் கடன் கொண் டமைந்த இலக்கியச் செயற்கைக் கலவை மொழியே சமற்கிருதம். இதற்கு, ஏற்கெனவே இருவேறு நிலைகளில் நேரல்லா வழியிற் கடன் கொள்ளப்பட் டிருந்த தமிழ்ச்சொற்களும் துணைசெய்தன. இதனால், கீழையாரியம் மூவேறு காலத்தில் தமிழ்ச்சொற்களைக் கடன் கொண்டமை அறியப்படும்.

அவற்றுள்:

முதற்காலம் மேலையாரியக் காலமாகும். அக் காலத்திற் கடன் கொள்ளப்பட்டவை முதற் காலத் தமிழ்ச்சொற்கள் (Tamil of the First Period) எனத் தகும்.

இரண்டாங் காலம் வேத ஆரியக் காலமாகும். அக்காலத்திற் கடன் கொள்ளப்பட்டவை இரண்டாங் காலத் தமிழ்ச்சொற்கள் (Tamil of the Second Period) எனத் தகும்.

மூன்றாங் காலம் சமற்கிருதக் காலமாகும். அக் காலத்திற் கடன் கொள்ளப்பட்டவை மூன்றாங் காலத் தமிழ்ச்சொற்கள் (Tamil of the Third Period) எனத்தகும்.

1. மேலையாரியத் தமிழ்ச்சொற்கள்

எ-டு:

தியூத்தானியம்:

அம்ம ஆன்(= - amma, ஆன் ( = அங்கு) - yon, இரு அங்கு) - yon, இரு - are, இரும்(பு) - iron, ஈன் – yean, ean; உரறு roar, கரை – cry, காண் con, cun, can; குரங்கு (= வளை) – crank, குருள் - curl, கொடுக்கு - crook, சப்பு - sup, sip; துருவ - through, நாகு nag, பட்டு (அடி) - beat, புல்லம் - bull, மெது - smooth, - முன்னு - mun (think), வேண்டு – want.