உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

தென்சொற் கட்டுரைகள் வாயிலாகவே அறிவிக்கப் பெறினும், முன்னது பண்பு என்றும், பின்னது பண்பி என்றும் வேறுபாடறிதல் வேண்டும்.

இலக்கு, இலக்கியம், இலக்கணம் என்னும் தென்சொற்கள் வடமொழி யில், முறையே, லக்ஷ், லக்ஷ்ய, லக்ஷண என நிற்கும். லக்ஷண என்னும் வடசொல், குறி, இயல், இயல் வரையறை என்னும் பொருள்களைப் பொதுப் படக் குறிக்குமேயன்றி, இலக்கணம் (grammar) என்னும் பொருளைக் குறிக்காது. அங்ஙனமே, லக்ஷ்ய என்னும் வடசொல்லும், குறிப்பொருள், இயல் விளக்கப் பொருள் எடுத்துக்காட்டு என்னும் பொருள்களைப் பொதுப் படக் குறிக்குமேயன்றி, இலக்கியம் (literature) என்னும் பொருளைத் தராது. இலக்கணத்தை வியாகரணம் (வ்யாகரண) என்றும், இலக்கியத்தை சாகித் தியம் (ஸாஹித்ய) என்றும் சொல்வர் வடநூலார். வியாகரணம் என்னும் சொல் கூறுபடுப்பது என்னும் பொருளது. சாகித்தியம் என்பது தொடர்பு என்னும் பொருளது.

2

தமிழில், இலக்கணத்திற்கு அணங்கம் என்னும் பெயரும், இலக்கியத் திற்கு அணங்கியம் என்னும் பெயரும் உண்டு. ஆயின், இவை வழக்கில் இல்லை. தொன்றுதொட்டு இலக்கணம், இலக்கியம் என்னும் சொற்களே இருவகை வழக்கிலும் இருந்துவருகின்றன. அணங்குதல் = ஒலித்தல் அணங்கு = ஒலி, எழுத்து, சொல். அணங்கம் = இலக்கணம் (சொல் லிலக்கணம், மொழியிலக்கணம்), அணங்கத்தையுடையது அணங்கியம். ஒ.நோ: Gk. gramma (letter), E. grammar. L. littera (letter), E. literature.

இலக்கணம் இலக்கியம் என்னும் சொற்கள், முறையே இயல், இயலது என்னும் பொருளில் சிறப்பாக மொழிபற்றியே எழுந்தனவேனும், சிறுபான்மை பிறபொருள் பற்றியும் ஆளப்பெறும்.

இலக்கியம் என்பது, ஒரு சிறந்த இலக்கணத்தை ஒரு பொருளின் வாயிலாய் எடுத்துக்காட்டுவது, அல்லது விளங்க வைப்பது. எடுத்துக் காட்டைக் குறிக்கும் `illustration' என்னும் ஆங்கிலச்சொல், ஒளியைக் குறிக்கும் சொல்லினின்று தோன்றியதாகும். Illustrate = L.il + lustrare (illumine). இலக்குதல் என்னும் வினைச்சொல், குறித்தல் என்னும் வினைச்சொற்போல் எழுதுதலைக் குறித்தலோடு, இலங்குதல் என்பதன் பிறவினையாய் விளங்கச் செய்தல் என்றும் பொருள் தருகின்றது. எழுத்து ஒலியின் குறி.

இலக்குதல் = வரைதல். “இரேகை யிலக்குக” (சைவசமய நெறி, பொது. 274). இலங்கு இலக்கு (பி.வி.).

உகரவீற்றுச் சொற்கள் இகரவீற்றவாய்த் திரிதல் இயல்பு.