உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமற்கிருதவாக்கம் - இலக்கணம்

பெயர்

எ-டு :

குச்சு குச்சி

பஞ்சு - பஞ்சி

வினை

நீடு - நீடி

நீட்டு - நீட்டி

129

உரி

கடு கடி

இம் முறையில் இலக்கு என்பது இலக்கி என்றும் ஆகும்.

இலக்கித்தல் = வரைதல், எழுதுதல். “இவ்வுருவு நெஞ்சென்னுங் கிழியின்மே லிருந்திலக் கித்து” (சீவக. 180)

இலங்கு என்பது இலகு என்பதன் இடைமிகை அல்லது விரித்தல். இலகுதல் விளங்குதல், எல் - இல் - இலகு.

"எல்லே யிலக்கம்"

(தொல். 754)

தமிழிலக்கணம் இயல் இசை நாடகம் என முத்திறப்பட்டு, கி.மு.பத்தா யிரம் ஆண்டுகட்கு முன் தோன்றிய தலைக்கழகத்திற்கு முன்பே முழு நிறைவடைந்துவிட்டது. இயற்றமிழிலக்கணம் எழுத்து சொல் பொருள் என முப்பாலது. அற்றை நூலெல்லாம் செய்யுளாதலால், பொருளில் யாப்பும் அடங்கிற்று. அணியை ஒரு தனியிலக்கணப் பிரிவாக முதனூலார் காண்டிலர். நல்லிசைப் புலவர் செய்யுளில் அணி தானாக அமையு மென்பதும், அதற்கொரு வரம்பில்லை யென்பதும் அவர் கருத்து. பொரு ளணிகட்கெல்லாம் தாயாகிய உவமை, பொருளை விளக்கும் முறைமை பற்றியே பொருளிலக்கணப் பகுதியாக உவமவியலிற் கூறப்பட்டது.

தலைக்கழகம் இருந்த தென்மதுரை, ஆத்திரேலியாவும் ஆப்பிரிக்கா வும் நாவலந்தேயமும் ஒன்றாயிருந்திருந்த குமரிமலை நாட்டில் அமைந்த தாதலால், ஆரியம் என்னும் பேரே உலகில் தோன்றுமுன், வரலாற்றிற் கெட்டாத முதுபழந் தொன்மைப்பட்டது. அன்று அகத்தியமு மில்லை; அகத்தியருமில்லை. அக்கால நூலெல்லாம் தமிழரே இயற்றிய தனித்தமிழ் நூலே. இறையனாரகப்பொருளுரையிலுள்ள முச்சங்க வரலாறு பிற்காலத்தில் (கி.பி. 6ஆம் 7ஆம் நூற்றாண்டில்) எழுதப்பட்டதாதலால், தலைக்கழக நிலைமையை உண்மையாய் எடுத்துக் கூறவில்லை.

வேத ஆரியர் நாவலந் தீவிற்கு வந்த காலம் கி.மு. 2000 - 1500. அவர்க்கு அன்று எழுத்துமில்லை, இலக்கியமுமில்லை. அகத்தியர், நாரதர் போன்றவர் தென்னாட்டிற்கு வந்து தமிழரொடு தொடர்புகொண்ட பின்னரே, தமிழைப் பின்பற்றி வடமொழி யிலக்கணமும் எழுத்தும் அமைத்துக் கொண்டவர். வேதத்தில் தமிழ்ச்சொற்களும் தமிழெழுத்தொலிகளும் உள்ளமை முன்னரே கூறப்பட்டது. தமிழிலக்கணம் ஓர் உயிருள்ள முதுபெருந் தாய்மொழிக்கு வகுக்கப்பட்டதென்றும், வடமொழியிலக்கணம் ஒரு வழக்கற்ற நூன்மொழிக்கே வகுக்கப்பட்டதென்றும், வேறுபாடறிதல் வேண்டும்.