உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

தென்சொற் கட்டுரைகள்

முதன் முதல் வேதமொழிக்கு வகுக்கப்பட்ட எழுத்தொலியிலக்கணம் சிட்சை (சிக்ஷை) என்பதாம். அது நால்வேதங்கட்கும் கிளைகள் போன்ற பாட வேறுபாட்டுத் தொகுதிகளான சாகைகளுள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி ஏற்பட்டிருந்ததனால் பிராதிசாக்கியம் (ப்ராதிசாக்ய) எனப்பட்டது. பொது வெழுத்துகளைப் பொறுத்தமட்டில் வடவெழுத்துகளின் ஒலி, முறை, பிறப்பு, உருவம், மாத்திரை (அளபு) ஆகியவை ஆ தமிழிலக்கணத்தைத்

தழுவியவையே. எழுத்துகளை ஒலிப்பதற்குத் துணையாகக் கொள்ளப் பெறும் சாரியைகள், தமிழ் முதனூற்படி, குறிலுக்குக் கரமும், உயிர் நெடிலுக்குக் காரமும், ஐ ஒளவிற்குக் கானும், ஆய்தத்திற்கு ஏனமும் ஆகும். ஆயின், வடநூலார் குறிலுக்குக் காரமும் கொண்டனர். அதைப் பிற்காலத் தமிழிலக்கணியர் பின்பற்றியதோடு குறிற்குக் கானும் வகுத்துவிட்டனர்.

இடையினம் வலிக்கும் மெலிக்கும் இடைநிகர்த்தா யொலிப்பது பற்றித் தமிழில் அப் பெயர் பெற்றது. வடநூலார் அதை அந்தஸ்த (antashtha இடையில் நிற்பது) என மொழிபெயர்த்து, உயிருக்கும் மெய்க்கும் இடைப்பட்டு அரையுயிராய் (semi Vowels) இருப்பது என்று பொருட்கரணியங் காட்டுவர்.

சிட்சைக்குப்பின் எழுந்தது சந்தசு (சந்தஸ்) என்னும் யாப்பு நூல். அது வேத மந்திரங்களின் ஓசை வேறுபாட்டையும் அமைப்பையும் எடுத்துக் கூறுவது. சந்தசின் பின் எழுந்தது. எழுத்திலக்கணமும் சொல்லிணக்கமும் கூறும் வியாகரணம். இடைக்கழகத்திறுதியில் முதன்முதலாய்த் தென் னாட்டிற்கு வந்து தமிழ் கற்ற வேதகாலப் பிராமணர் அல்லது ஆரியர், தமிழைப் பின்பற்றி ஆரியமொழிக்கு அமைத்துக் கொண்ட இலக்கண நூல்களுள் ஒன்று ஐந்திரம். அஃது இந்திரன் என்பவனாற் செய்யப்பட்டது. அது பாணினீயத்திற்கு மிகமுந்தியது. அது தோன்றியதும் மறைந்ததும் தமிழ்நாட்டிலேயே. அதனால் அது வேறெங்கும் காணப்படவில்லை. பாணினியின் இலக்கணம் (அஷ்டாத்யாயீ) வழக்கிற்கு வந்தபின், ஐந்திரம் எங்கும் காணப் பெறாமையாலேயே,

புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின் விண்ணவர் கோமான் விழுநூல் எய்துவிர்”

(சிலப். 11 : 98 –9)

என்று கி.பி.3ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தினனான மாங்காட்டு மறையோன், ஐந்திரத்தின் தொன்மையும் சிறப்பும் தோன்றக் கூறியதாக இளங்கோவடிகள் பாடியுள்ளார். ஒரு பொய்கைக் குளிப்பை ஐந்திர வியாகரண அறிவிற்கேதுவாய்ச் சொல்லியிருப்பதால், அப் பொய்கையில் அந் நூற்படிகளெல்லாம் பாணினீயத்தின் சிறப்பை மிகுத்தற்கு வேண்டு மென்றே அமிழ்த்தப்பட்டனவோவென்று ஐயுற நேர்கின்றது.

தொல்காப்பியர் காலத்திற் பாணினீயம் தோன்றவில்லை. அவர் கற்ற வடமொழி யிலக்கணம் ஐந்திரமே. அதனால்,