உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமற்கிருதவாக்கம் இலக்கணம்

‘மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த

தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றி”

எனப் பாடினார் பனம்பாரனார்.

131

தொல்காப்பியர் காலம் கி.மு.7ஆம் அல்லது 6ஆம் நூற்றாண்டு. பாணினி காலம் கி.மு. 5ஆம் நூற்றாண்டு. பாணினீயத்துக்குப் பொழிப்புரை வரைந்த காத்தியாயனர் காலம் கி.மு.4ஆம் நூற்றாண்டு. அந் நூற்கு அகலவுரை வரைந்த பதஞ்சலியார் காலம் கி.மு.3ஆம் நூற்றாண்டு.

பாணினியும் காத்தியாயனரும் வடநாட்டினராகச் சொல்லப் பெறினும், பதஞ்சலியார் தமிழ்நாட்டினர்; அல்லது தமிழ்நாட்டில் நீண்ட காலம் வாழ்ந்தவர். அவர் வியாக்கிரபாதர் என்னும் புலிக்கால் முனிவரொடு தில்லையில் வதிந்து, திருச்சிற்றம்பலத்திற் சிவபிரான் திருக்கூத்தைக் கண்டு களித்தவரென்று கோயிற்புராணங் கூறுகின்றது. கி.மு. 3ஆம் நூற்றாண்டில் தில்லையில் வதிந்த ஒரு வடநூற் புலவர் மாணிக்க வாசகர்போல் ஒரு சிறந்த தமிழ்ப் புலவராயு மிருந்திருத்தல் வேண்டும். சிறந்த வேதநூற் புலவரும் சமற்கிருதப் பண்டிதரும் இன்றும் தென்னாட்டிலேயே உள்ளனர். கிறித்து விற்குப் பிற்பட்ட தமிழ்வேந்தர் மூவரும், தம் அறியாமையால் தமிழைப் புறக்கணித்து வடமொழியையே பெரிதும் வளர்த்து வந்திருக்கின்றனர்.

பாணினீயம் நேரடியாகவோ வடநூல் வழியாகவோ தமிழிலக் கணத்தைத் தழுவிய தென்பது வெள்ளிடைமலையா யிருப்பினும், அதன் உரையாசிரியர் தமிழ்ப் பழங்குடிப் பொதுமக்களின் பேதைமையைப் பெரிதும் பயன்படுத்தி, உயிரையும் மெய்யையும் கூறும் அந் நூற் பதினான்கு நூற்பாக்களும் சிவபெருமான் உடுக்கையிலிருந்து தோன்றின வென்றும், அதனால் மாகேசுவர சூத்திரமென்று பெயர் பெறுமென்றும், துணிந்து கூறிவிட்டனர். பாணினியாரே சாக்கலியர், பாரத்துவாசர் முதலிய பல முன்னூலாசிரியரைத் தம் நூலிற் குறித்திருக்கும்போது, பாணினீயம் முழு முதனூல் எனல் எங்ஙன் பொருந்தும்?

சில வடமொழி யிலக்கணக் குறியீடுகள் தமிழிலக்கணக் குறியீடு களின் மொழிபெயர்ப்பாயுள்ளன.

எ-டு : தமிழ்

வடமொழி

பெயர்

நாமம்

வினை

வேற்றுமை

கிரியை (க்ரியா) விபக்தி

சில வடநூற் குறியீடுகள் தமிழ்ச்சொற்களை ஒத்துள்ளன.

எ-டு : தமிழ்

உத்தி

உவமை

வடமொழி யுக்தி

உபமா