உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

தென்சொற் கட்டுரைகள் வடமொழியிற் பொருளிலக்கணமில்லை. வடமொழி யிலக்கணம் கிறித்துவிற்கு 1500 ஆண்டுகட்கு முன்தோன்றி 500 ஆண்டுகட்குள் வழக்கற்றுப்போன ஒரு நூன் மொழியை ஆராய்தற்கு எழுந்தது. தமிழ் லக்கணமோ. கி.மு.இருபதினாயிரம் ஆண்டுகட்கு முன்பே முழு வளர்ச்சியடைந்த மொழியில், பத்தாயிரம் ஆண்டாகத் தோன்றி வந்த பல துறைப்பட்ட பன்னூற்றுக் கணக்கான நூற்பொருள்களை, அகம் புறமென்று இருபாற்படுத்தி ஆராய்தற் பொருட்டெழுந்தது. தமிழின் தொன்மையையும் தன்மையையும் உண்மையாய் உணர்ந்தார்க்கு இஃது ஒரு சிறிதும் உயர்வு நவிற்சி யன்றென்பது தெற்றெனப் புலனாம்.

கால்டுவெல் கண்காணியார், தமிழின் குமரிநாட்டுத் தோற்றத்தையும், தொல்காப்பியத்தையும் கழக நூலையும் அறியாதும், தமிழரும் தமிழும் இன்றுள்ள நிலையை எண்ணிக்கொண்டும், தமிழ் நாகரிகம் கொற்கையில் தோன்றியதென்றும், உயரிய கலைகளெல்லாம் ஆரியருடையவை யென்றும், தமிழ் நெடுங்கணக்கும் வேற்றுமையமைப்பும் சமற்கிருதத்தைப் பின்பற்றியவையென்றும், தவறாகக் கூறிவிட்டார்.

தமிழில், எட்டு வேற்றுமையும் இயற்கையாகவும் ஏரண முறைப்பட் டும் தனித்தனி வேறுபட்ட பொருளுடையனவாகவும் இருக்கின்றன. அத்தோடு, மூவேறு வகையில் பெயர் கொண்டும் உள்ளன. எண் வகையில், முதல் வேற்றுமை, 2ஆம் வேற்றுமை, 3ஆம் வேற்றுமை, 4ஆம் வேற்றுமை, 5ஆம் வேற்றுமை, 6ஆம் வேற்றுமை, 7ஆம் வேற்றுமை, 8ஆம் வேற்றுமை என்றும்; பொருள் வகையில், எழுவாய் வேற்றுமை, செய்பொருள் வேற்றுமை, கருவி வேற்றுமை, கொடை வேற்றுமை, நீக்க வேற்றுமை, கிழமை வேற்றுமை, இட வேற்றுமை, விளி வேற்றுமை என்றும்; உருபு வகை யில், பெயர் வேற்றுமை, ஐ வேற்றுமை, ஒடு வேற்றுமை, குவ் வேற்றுமை, இன் வேற்றுமை, அது வேற்றுமை; கண் வேற்றுமை, விளிப் பெயர் வேற்றுமை என்றும் பெயர் பெற்றிருத்தல் காண்க.

வடமொழியிலோ, ப்ரதமா விபக்தி, த்விதீயா விபக்தி, த்ருதீயா விபக்தி, சதுர்த்தீ விபக்தி, பஞ்சமீ விபக்தி, ஷஷ்டீ விபக்தி, ஸப்தமீ விபக்தி, ஸம்போதன ப்ரதமா விபக்தி என்று எண்பற்றியே எண் வேற்றுமையும் பெயர் பெற்றுள்ளன.

3ஆம் வேற்றுமைப் பொருள்களான கருவி, வினைமுதல் (கருத்தா), உடனிகழ்ச்சி ஆகிய மூன்றும் முரண்பட்டவை என்று கால்டுவெல் கண்காணியார் கருதுகின்றார். அம் மூன்றையும் ஆய்ந்து நோக்குவார்க்கு, அவற்றின் ஒற்றுமை தோன்றாமல் போகாது. வினைமுதல் என்பது உயர் திணைக் கருவியாதலால், கருவியுள் அடங்கும். கருவியுள் உடனிகழ்ச்சியும் உடனிகழ்ச்சியிற் கருவியும் நுண்ணியதாய்க் கலந்து கிடப்பதை, நுழைபுலங் கொண்டும் வழக்கு நோக்கியும் உணர்ந்தே, இவ் விரண்டையும் ஒரு