உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரியப் பூதம் அடக்கமெழும்புதல்

145

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்

தொழுதுண்டு பின்செல் பவர்”,

(குறள்.1033)

‘பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர்

அலகுடை நீழ லவர்”,

(குறள்.1034)

இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது

கைசெய்தூண் மாலை யவர்",

(குறள். 1035)

‘உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்

(குறள். 1036)

விட்டேம்என் பார்க்கு நிலை”

என்றது தமிழ் அறநூல்.

"சிலர் பயிரிடுதலை நல்ல தொழிலென்று நினைக்கிறார்கள். அந்தப் பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது. ஏனெனில், இரும்பை முகத்திலேயுடைய கலப்பையும் மண்வெட்டியும் பூமியையும் பூமியி லுண்டான பலபல ஜெந்துக்களையும் வெட்டுகிறதல்லவா?” என்றது வடமொழி அறநூல்.

மநுதர்ம சாஸ்திரம் (இராமாநுஜாசாரியார் மொழிபெயர்ப்பு, 10 : 84) இனி, “வால்மீகியிலிருந்து ஒரு வரி அல்லது காளிதாசனிலிருந்து ஓர் உவமை அல்லது உபநிடதங்களிலிருந்து ஒரு விழுமிய கூற்று, நம் நெஞ்சாங்குலை நரம்புகளைத் தீண்டி, இந்தியாவில் மாந்தன் தோன்றிய காலத்திற்குக் கொண்டுபோய்விடும். முந்தியல் காலத்தனவும் முன்னோரைப் பற்றியனவும் உள்மன யுணர்ச்சியனவுமான ஆயிரம் நினைப்புகளை நம்மில் தூண்டிவிடும்” என்றார் கட்டுரையாளர். அவர் திருக்குறளும் சிலப்பதிகாரமும் திருக்கோவையும் திருமந்திரமுங் கம்பவிராமாயணமும் படித்திருந்தால் அங்ஙனங் கூறியிரார்.

இனிய வுளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று",

(குறள். 100)

களித்தானைக் காரணங் காட்டுதல் கீழ்நீர்க்

குளித்தானைத் தீத்துரீஇ யற்று",

(குறள். 929)

தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்

நிலையி னிழிந்தக் கடை”,

(குறள். 964)

உப்பமைந் தற்றாற் புலவி யதுசிறிது

மிக்கற்றால் நீள விடல்"

என்னும் திருக்குற ளுவமைகளையும்,

எண்ணுதற் காக்கரி திரண்டு மூன்றுநாள் விண்ணவர்க் காக்கிய முனிவன் வேள்வியை மண்ணினைக் காக்கின்ற மன்னர் மைந்தர்கள் கண்ணினைக் காக்கின்ற விமையிற் காத்தனர்"

(குறள். 1302)

(1:9:41)