உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

தென்சொற் கட்டுரைகள் என்றார் திருவள்ளுவர். பிறப்பாற் சிறப்பில்லை யென்பதும், விருப்பமும் திறமையும்பற்றித் தொழில் வேறுபாடும், தொழில் வேறுபாடுபற்றிக் குலவேறுபாடும் உண்டாகுமென்பதும், ஒருவன் தொழில் மாறும்போது குலமும் மாறும் என்பதும், குலவுயர்வு தாழ்வு ஒழுக்கமுந் துப்புரவும் உண்மை யின்மையாலேயே யன்றித் தொழில் வேறுபாட்டாலில்லை யென்பதும், மக்கள்தொகை பெருகப் பெருகத் தொழிலும் பெருகுமாயினும் எல்லாத் தொழிலும் கல்வி, காவல், வாணிகம், உழவு என நாற்பாலாய் அடங்குமென்பதும், அதனால் அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என நாகரிக மருதநில மக்கள் நாற்பெரு வகுப்பாராய் அமைவர் என்பதும், ஏனைக் குறிஞ்சி முல்லை பாலை நெய்தல் மாந்தராகிய குறவரும் ஆயரும் வேட்டுவரும் பரவரும் (நுளையரும்) மருதநில மக்களினும் நாகரிகங் குன்றியவ ரென்பதும், பண்டைத் தமிழ்நூல்களால் அறியக் கிடப்பனவாம்.

ஆயின், சமற்கிருத நூல்களோ, பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்னும் நாற்குலங்களையும் இறைவனே படைத்தானென்றும், அங்ஙனம் படைத்ததாக இறைவனே சொன்னானென்றும் (பகவற்கீதை, 4:13); புருடன் (புருஷ) என்னும் உயிரின மூல வடிவத்தின் முகத்தினின்று பிராமணனும், தோளினின்று சத்திரியனும், தொடையினின்று வைசியனும், பாதத்தினின்று சூத்திரனும் தோன்றினர் என்றும் (இருக்கு வேதம், 10ஆம் மண்டலம், 90ஆம் மந்திரம் புருஷசூக்தம்); பிராமணனுக்கு மற்ற மூவரும் தொண்டு செய்ய வேண்டுமென்றும், துறவும் வீடுபேறும் பிராமணனுக்கே உரியனவென்றும்; முக்குண வேறுபாட்டாலும் பழவினையாலும் நாற் குலமும் அமைவதாற் குலம் பிறவிபற்றியதென்றும்; நாற்குலமும் முறையே ஒன்றினொன்று தாழ்ந்தவை யென்றும்; ஒருவன் எவ்வெத் தொழிலை மேற்கொள்ளினும் அவன் குலம் அவன் இறக்கும்வரை மாறாதென்றும்; நாற்குலத்தாரும் முறையே வேத மோதி வேள்வி வளர்த்தும், போர்செய்து காவல் மேற்கொண்டும், வணிகமும் உழவும் ஆற்றியும், கைத்தொழிலுங் கூலி வேலையுந் தொண்டுஞ் செய்தும், வாழவேண்டு மென்றும்; பிராமணன் சமையத்திற்கேற்ப எத்தொழிலையும் மேற்கொள்ள லாமென்றும்; அவன் நிலத்தேவன் (பூசுரன்) என்றும், வேதமொழியும் சமற்கிருதமும் கிய கீழையாரியம் தேவமொழியென்றும்; உண்டி, உடை, உறையுள், உடைமை, பெயர், பழக்கவழக்கம், சடங்கு, தண்டனை முதலிய எல்லாவகை நிலைமை களும் குலத்திற்கேற்ப வேறுபட்டிருத்தல் வேண்டுமென்றும்; இத்தகைய பிறவுமே கூறுகின்றன.

சுழன்றுமேர்ப் பின்ன துலகம் அதனால் உழந்தும் உழவே தலை”,

“உழுவார் உலகத்தார்க் காணியஃ தாற்றா தெழுவாரை யெல்லாம் பொறுத்து”,

(குறள்.1031)

(குறள்.1032)

7