உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரியப் பூதம் அடக்கமெழும்புதல்

143

பிரியும். 'ஸ்' எழுத்துப்பேறு, ஸ்ம்-க்ரு என்னும் கூட்டடிக்கு “to put together, form well, join together, compose, RV” என்றே முதற்கண் பொருள் கூறியுள்ளது மானியர் வில்லியம்சு சமற்கிருத - ஆங்கில அகர முதலி, ஸம் கூட, க்ரு - செய். கும் என்னும் தென்சொல்லே வடமொழியில் ஸம் எனத் திரிந்துள்ளது.

கும்முதல் கூடுதல், கும் - கும்மல், கும் - கும்பு - கும்பல், கும் - குமி - குமியல், குமி - குவி - குவியல், கும்மல் - L. cumulus, E. cumulute, கும் - L. cum. E.com.con, Gk. Sym. Syn, Skt, ஸம். இதிலிருந்து சமற்கிருதத்தின் திரிபு மிகையைக் கண்டுகொள்க.

தமிழ் தெற்கில் முழுகிப்போன குமரிக்கண்டத்தில் தோன்றி வளர்ச்சியடைந்தது. தமிழ் வடக்கிற் சென்று திரவிடமாகத் திரிந்தது. திரவிடமே வடமேற்காகச் சென்று ஐரோப்பாவின் வடமேற்கு மூலையை முட்டி ஆரியமாக மாறி, பின்பு தென்கிழக்காக வந்து கீழையாரியமாக இந்தியாவிற்குட் புகுந்து வழக்கற்றது. அவ் வழக்கற்ற ஆரியமும் அக் காலத்து வடஇந்திய வழக்குமொழியாகிய பிராகிருதமுங் கலந்ததே வேத ஆரியம். அவ் வேத ஆரியமும் திரவிடமுந் தமிழுங் கலந்ததே சமற் கிருதம். ங்ஙனம் ஆரியமும் பிராகிருதமும் திரவிடமும் தமிழும் கலந்து ஒன்றாக்கப்பட்டதினாலேயே, வடமொழி ஸம்ஸ்க்ருத எனப்பட்டது. க்ரு என்பது கரு என்னும் தென்சொல்லின் திரிபாம். கருத்தல், செய்தல், அவ் வினை இன்று வழக்கற்றது. கருவி, கருமம் என்னும் தென்சொற்களின் முதனிலை கரு என்பதே. சொன்முதல் உயிர்மெய்யின் உயிர்நீக்குதல் வடமொழி யியல்பாம்.

– -

எ-டு: துருவு -த்ரு, பெருகு ப்ருஹ், திரு ச்ரீ, மரி - ம்ரு. இதனால், தமிழே ஆரியத்திற்கு மூலமானதும் திருந்தியதும் பண்பட்டதும் ஆகும் என அறிந்துகொள்க.

அறிவுறுத்துந் திறன் :

மூ

சமற்கிருத இலக்கியத்துள்ள நற்கூறு களெல்லாம் தமிழென்றும், தீக் கூறுகளெல்லாம் ஆரியம் என்றும் பொதுவாக அறிந்துகொள்க.

எ-டு:

"பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்.

"ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம்

இழிந்த பிறப்பாய் விடும்."

"பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந் தத்தங்

கருமமே கட்டளைக் கல்."

(குறள்.972)

(குறள்.133)

(குறள். 505)