உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரியப் பூதம் அடக்கமெழும்புதல்

ce

அடியில் தன்னள வரசர்க் குணர்த்தி வடிவேல் எறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரி கோடுங் கொடுங்கடல் கொள்ள வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு

தென்றிசை யாண்ட தென்னவன் வாழி."

147

(சிலப். 11 : 17-22)

என்னும் சிலப்பதிகார அடிகள் பனிமலை கடலுக்குள்ளிருந்து எழுவதற்கும் முந்திய தொன்முது பண்டைக் காலத்திற்கு நம்மைக் கொண்டுபோய்

விடவில்லையா?

இம் மாதம் 10ஆம் பக்கல், முற்காட்டிய விளம்பரப்படி, மயிலைச் சீநிவாச சாத்திரி மண்டபத்தில், 'தமிழ்நாட்டுப் பெற்றோர் கழக'த்தின் கூட்டம் மேனாள் சென்னைத் தலைமைத் தீர்ப்பாளர் பர்.பி.வி.இராசமன்னார் தலைமையில் நடைபெற்றது. கழகத்தின் பெயர் 'தமிழ்நாட்டுப் பெற்றோர் கழகம்' என்றிருப்பினும், உண்மையில் அது தமிழ்நாட்டுப் பிராமணப் பெற்றோர் கழகமே. தமிழறியாத தெலுங்கரான இராசமன்னாரும் தமிழ் வரலாற்றறிவும் மொழிநூலறிவுமில்லாத திரு.ம.பொ.சி.யும் இவர் போன்ற இரண்டொருவரும் கலந்துகொண்டதினால், அது தமிழ்நாட்டுப் பெற்றோரனைவரையும் படிநிகர்க்கும் கழகம் ஆகிவிடாது.

மொழிவாரிப் பைதிர (பிரதேசப் பிரிப்பின்பின், தமிழ்நாட்டைப் பழஞ்சென்னைக் கூட்டுநாடு போன்றே கருதிக்கொண்டு, தமிழறிவோ தமிழ்ப்பற்றோ இல்லாத தெலுங்கர் தமிழுக்கு மாறான கூட்டங்களிற் கலந்துகொள்வதோடு, தமிழுக்குந் தமிழர்க்குங் கேடு விளைக்கும் கருத்துகளை வெளியிடுவதும், தீர்மானங்களை நிறைவேற்றுவதும் தகாத செயல்களாம். பர். இராசமன்னார் தெலுங்குநாட்டிலோ தமிழ்நாடு தழுவாத இந்தியாவிலோ சமற்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்க முயற்சி செய்யின், அதிற் குற்றமொன்றில்லை. ஆயின், தமிழைத் தெலுங்குபோற் கருதிக் கொண்டு, இக்காலத்திலும் தமிழ்நாட்டு மொழித்துறைச் செய்தியில் அவர் ஈடுபடுவது மிகமிகக் கண்டிக்கப்படத்தக்கதாம். சமற்கிருதம் சேரச்சேரத் தெலுங்கு உயருமென்றும் அது தீரத்தீரத் தமிழ் உயருமென்றும், அவர் வேறுபாடறிதல் வேண்டும். தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆரியம் இன்னும் வேரூன்றியிருப்பதனாலும், சென்னைப் பல்கலைக்கழகத் துணைக் கண்காணகராகப் பர். இலக்குமணசாமி அவர்களை இறுதியாகத் தேர்ந் தெடுத்தற்கு அமைக்கப்பட்ட குழுவுறுப்பினர் மூவரும் தெலுங்கரா யிருந்ததற்கு ஓர் எதிர்ப்பும் இன்மையாலும், பழைய நாள்போன்றே தமிழ்நாட்டு நிலைமை என்றுமிருக்குமென்று கருதுகின்றார் போலும்! கோவைப் புதுப்புனைவாளர் (Inventor) திரு. கோ. துரைச்சாமி (ஜி.டி.நாயுடு) அவர்களும் காலஞ்சென்ற பர். வரதராசலு அவர்களும் போன்றவரே தமிழ்நாட்டு மொழித்துறையிலும் ஆட்சித் துறையிலும் தமிழர் போன்றே