உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

148

தென்சொற் கட்டுரைகள் ஈடுபடமுடியும். பால்போல் இயல்பாகவுள்ள தமிழ் வேறு; தயிர்போல் திரிந்துள்ள திரவிடம் வேறு என அறிக.

கழகத் தலைவர் திரு கே.பாலசுப்பிரமணிய ஐயர், சமற்கிருத எதிர்கால நிலையைப்பற்றித் திரு. அண்ணாதுரையைத் தாம் வினவிய போது, 'அஞ்சற்க! எல்லா ஏந்துகளும் (வசதிகளும்) உங்கட்குத் தரப்படும்” என்று அவர் விடையிறுத்ததாகக் கூட்டத்திற் கூறியுள்ளார். திரு. அண்ணா துரையார் தமிழுக்கு அதிகாரி யன்மையின், அவர் இன்று உடலோ டிருந்திருப்பினும், அவர் கூற்றுச் செல்லாதென உணர்க.

தமிழ்நாட்டுத் தி.மு.க. அரசிற்கு அறிவுரை

இற்றை யாளுங்கட்சி தன்னுரிமை (சுதந்தரா)க் கட்சியையும் கூட்டணி யுறுப்பாகக் கொண்டிருப்பதாலும், திரு அண்ணாதுரை போன்ற ஆற்றலாளர் இன்று தி.மு.க.வில் இல்லாமையாலும், தி.மு.க. தமிழ்ப் புலவர் பலருள்ளும் ஒருவர்க்கேனும் ஆரியத்தை யெதிர்த்துத் தமிழைக் காக்கும் மதுகையின்மையானும், மயிலைத் தமிழ்நாட்டுப் பெற்றோர் கழகச் சார்பில், ஓய்வு பெற்றவரும் பெறாதாருமான பெரும்பதவியரும் சாய்கால் மிக்க பெருமக்களும் இற்றை முதலமைச்சர் இளைஞரென் றிகழ்ந்து, சமற்கிருதம் தழுவிய மும்மொழித் திட்டத்தைப் பள்ளிகளிற் புகுத்த முனைவராயின், பெருந்தலைகளென்றும் அடுத்த பொதுத்தேர்தலில் தாக்குமென்றும் வீணாக அஞ்சி அவர்க்கு இணங்கற்க. தி.மு.க. ஆட்சிக்கு என்றும் தலையாய அரண் தமிழே என்பதை மறவற்க. ஏற்கெனவே, தி.மு.க. அரசு தமிழைக் காக்கவும் வளர்க்கவும் வாய்த்த சமையங்களையும் வழிகளையும் பயன்படுத்த வில்லை. இரண்டாம் உலகத் தமிழ்க் கருத்தரங்கு மாநாடு தமிழுக்குக் கேடாக நடந்ததைத் தடுக்கவில்லை. தமிழ் வளர்ச்சிக்கு இன்றியமையாத சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் அகரமுதலித் திருத்தத்தையும், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் தொகுப்பையும் இன்னும் மேற்கொள்ள வில்லை. இனி, சமற்கிருதத்தையும் வலியுறுத்தி இந்திக்கும் வழிவகுப்பின், தமிழ்த்துணை இல்லாது போம் என எச்சரிக்கின்றோம். சட்டப் பொத்தகத்திற் சென்னை நாடென்றிருந்ததைத் தமிழ்நாடென்று மாற்றியதனால் மட்டும் தமிழ் ஒன்றும் வளர்ச்சி யடைந்துவிடாது. தமிழைப் பற்றிய தெளிவான அறிவோ தமிழ்ப் பற்றோ, தமிழைக் காக்கும் மனத் திண்மையோ இல்லாத தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் புகழ்ந்ததனால் மட்டும் தமிழைக் காவாத குற்றம் நீங்கிவிடாது.

தமிழ்நாட்டுப் பிராமணர்க்கு எச்சரிக்கை

பிராமணர் பாரதக் காலத்திற்கு முன்பிருந்தே பல்வேறு சமையங் களிற் பல்வேறு கூட்டமாகத் தமிழ்நாடு வந்து குடிபுகுந்திருந்தும் இன்னும் இற்றைப் பிராமணர் நக்கீரரும் பரிதிமாற் கலைஞரும்போல் முழுத்தமிழ