உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரியப் பூதம் அடக்கமெழும்புதல்

149

ராகவில்லை. பேச்சுமொழி வேறின்மையின் போக்கற்றுப் போய்த் தமிழைப் பேசுகின்றனரேயன்றி, உண்மையான தாய்மொழிப்பற்று அதனிடம் அவர் வைத்திலர். பண்டைத் தமிழரசர் பேதைமையுங் கொடைமடமும் மதப்பித்தமுங் கொண்டிருந்ததினால், அற்றைப் பிராமணர் தம் வெண் ணிறத்தையும் தம் முன்னோர் மொழியின் முழங்கொலிகளையும் வரை யிறந்து பயன்படுத்தித் தம்மை நிலத்தேவரென்றும் தம் முன்னோர் மொழியைத் தேவமொழி யென்றும் கூறி ஏமாற்றி அவர் நம்புமாறு செய்துவிட்டனர். இக்காலத்தும் தமிழைக் காட்டிக்கொடுக்கும் கொண்டான் மாரும் வையாபுரிகளும் பேராயக்கட்சித் தலைவரும் ஒரு சிலரிருப்பினும், அச் சிறுபான்மையரை நம்பித் தம் முன்னோரின் ஏமாற்றுக் கலையைத் தொடரத் துணிவது வரலாற்றறிவும் மொழியாராய்ச்சியும் பரவெளிச் செலவும் மிக்க இக்காலத்திற்கு எள்ளளவும் ஏற்காதென்றும், அதோடு மிகுந்த ஏதத்தையும் விளைக்குமென்றும் அறிந்து, தமிழரைச் சூத்திர ரென்றும் தமிழரசரை அசுரரென்றும் இழித்தும் பழித்தும் தம் முன்னோர் செய்த வழுவாய்க்கெல்லாம் கழுவாய் தேடி, தமிழரொடு உடன்பிறப்பன்பு பூண்டும் தமிழிடம் தாய்மொழிப் பற்றுவைத்தும், உண்மையும் நன்றியறிவும் உள்ளவராக நடந்துகொள்வாராக.

அவ்வாறன்றி, இனிமேலும் அரைச்செயற்கை இலக்கிய நடை மொழியாகிய சமற்கிருதத்தை உயர்த்தித் தமிழைத் தாழ்த்த விரும்புவா ராயின், வருகின்ற கல்வியாண்டுத் தொடக்கத்தில், பள்ளிகளும், கல்லூரி களும் திறந்தபின், சென்னையில் தக்காரான பெரியார் தலைமையில் சமற்கிருத எதிர்ப்பு மாநாடு நடத்தப்பெறும் என எச்சரிக்கின்றோம். தமிழ்க் கலைச்சொல்லாக்கக் குழுத் தலைவரும் தமிழ்நாட்டு வரலாற்றாசிரியரும் தனித்தமிழ்ப் பற்றுள்ளவராகவே இனியிருத்தல் கூடுமென்றும் தெரிவிக்கின் றோம்.

தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் ஆகும் என்பதிற் பிராமணர்க்கு ஐயமிருப்பின் 1971ஆம் ஆண்டு இறுதியில், தில்லி, இலண்டன், பெர்லின், பாரிசு, மாசுக்கோ, நியூயார்க்கு ஆகிய மாநகரங்களுள் ஒன்றில் உலகமேடையில் தருக்க வாயிலாகச் சமற்கிருதத்தின் உயர்வை நாட்டற்கு இன்றிருந்தே வட்டங்கூட்டுவாராக. "மெய் வெல்லும்; பொய் தோற்கும்.” நீண்டகாலம் நிலைத்துவிட்டமையால் ஒருபொய் மெய்யாகி விடாது. இந்திய மொழிகட்கெல்லாம் மூலம் தமிழே யன்றிச் சமற்கிருத மன்று.

சமற்கிருதத்திற்கும், தமிழுக்கும் இடைப்பட்ட வுறவு தாக்கு வோனுக்கும் தற்காப்போனுக்கும் இடைப்பட்டது என்று நாங்கள் உணர்வதால், இப் போராட்டத்தை உயிர்நாடி வினையாகவும், இறுதி முயற்சியாகவுங் கொண்டு, இறைவனருளால் தப்பாது வெற்றிபெற எல்லா வழிகளையுங் கையாளத் திட்டமிட்டுள்ளோம் என்பதையும், தெரிவிக்க