உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

தென்சொற் கட்டுரைகள்

விரும்புகின்றோம். தமிழும் ஆங்கிலமுங் கொண்ட இருமொழித் திட்டமே தமிழ்நாட்டிற் கேற்றது. தமிழர் வழிபாடும் சடங்கும் குமரிநாட்டிற்போல் தமிழிலேயே இனி நடைபெறுதல் வேண்டும்.

சமற்கிருதம் தேவமொழி யென்னும் பழைய ஏமாற்று இனி ஒரு நொடியுஞ் செல்லாது. அது தேவமொழியாயின் தேவருலகிற்கே சென்று விடல் வேண்டும். இது மக்களுலகமாதலின் இங்கு மக்கள் மொழியாகிய தமிழே தலைமையாக வழங்குதல் வேண்டும்.

“தென்மொழி" மேழம் 1969