உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

வடமொழித் தென்சொற்கள்

உலகத்திலுள்ள மொழிகளெல்லாம் ஒரு பெருந் தாய்மொழியி னின்றும் உதித்தவை யென்பது வரலாற்று நூல் (History), குலநூல் (Eth- nology), மொழிநூல் (Philology) முதலிய பல நூல்களாலும் வலியுறுத்தப்படும். ஆயினும், திசைச்சொல் வகையில் ஒரு வகுப்பார் புதியனவாய் ஆக்கிக் கொண்டனவும்,தாய்மொழியினின்றும் புதியனவாய்த் திரித்துக்கொண்டனவுமான இருவகைச் சொற்கள் ஒவ்வொரு மொழிக்கும் சிறப்பாகும். இவ் விருவகைச் சொற்களும் ஒரு கிளைமொழிக்குரிய அதன் தாய்மொழியைச் சாரும்; ஒரு தாய்மொழிக் குரியவை ஒரு பெருந் தாய் மொழியைச் சாரும். திராவிட மொழிகளை நோக்கத் தமிழ் ஒரு தாய்மொழி யும், ஆரிய மொழிகளை நோக்கத் தமிழ் ஒரு பெருந் தாய்மொழியுமாகும். எண்ணிறந்த தமிழ்ச்சொற்கள் இறந்துபட்டமையாலும், ஆரியச் சொற்களில் பல உருத்தெரியாதவாறு அத்துணைத் திரிந்துள்ளதினாலும், பல வடசொற்கள் வடமொழிச் சிறப்புச் சொற்களாகவே தோன்றாநிற்கும். ஏனைச் சொற்களை இதுபோதுள்ள தென்சொற் றுணைகொண்டே தென்சொல் லெனக் காட்டல் மொழிநூலான் முட்டின்றி முடிவதாகும். இடுகுறிச் சொற்களாயின் இவ் வரம்பிற் குட்படா.

ஒரு சொல்லை ஒரு மொழிக் குரியதென்று அறிதற்கு அதன் பகுதி (stem) அல்லது மூலம் (root) எம்மொழியிலுள்ள தென்று அறிதல் வேண்டும்.

ஒரு சொல்லின் பகுதி அல்லது மூலம் பலமொழியி லிருப்பின், எம்மொழியில், பகுதி இயற்கையானதென்றும், பொருள் சிறந்ததென்றும் அறிதல் வேண்டும்.

பல மொழியிலும், பகுதி வடிவிலும் பொருளிலும் ஒத்திருப்பின், எம்மொழியில் அதன் திரிசொற்களுள வென்றும், அவையும் பல மொழியிலிருப்பின், எதில் அவை கழிபலவென்றும் காண்டல் வேண்டும்.

எத்துணையோ தென்சொற்களை வடசொற்களென்று பன்மொழிப் பேரறிஞருங்கூடப் பகர்ந்து வருகின்றனர். அவற்றுட் சில வருமாறு :

அகங்காரம். அகம் + காரம். அகம் அவ்வுலகம், வானுலகு, மோக்ஷம். அகரச்சுட்டடியாப் பிறந்தது; சேய்மையிலுள்ள வானுலகத்தைக்