உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடமொழிச் சென்ற தென்சொற்கள்

13

சொல்லாயின் பெயரிலக்கணம்(Declension) வேண்டும். கல் என்னும் வினை கற்றான், கற்றாள், கற்றார், கற்றது, கற்றன, கற்ற, கற்க, கற்பித்தான், கற்கப்பட்டது, கற்றிலன், கலை எனப் பல வடிவுகளிலும் புடைபெயர வேண்டும் வடமொழியிலோ அது கலா (கலை) எனத் தொழிலாகுபெயராய் மட்டும் நிற்கும். இஃதோர் உதாரணம்.

சில வடமொழிப் பற்றுடையார் முனிவர் என்னும் சொல்லுக்கு முனி என்பது பகுதியென் றறியாமல், மவுனம் செய்பவர் முனிவர் என்று வடமொழிவழி யுரைப்பர். 'ஐயன்' என்னும் தமிழ் முறைப்பெயரை ஆரியன் என்பதின் சிதைவாகக் கூறுவர். இங்ஙனமே ஏனைச் சொற்களுக்கும் அவர் வடமொழியைக் கற்பிப்பதுண்டு.

ஒரு வகுப்பாராவது பிற வகுப்பாருடன் இயைபின்றித் தாமாய் உலகத்தில் வந்தவரல்லர். அங்ஙனமே தமிழ் தவிர ஒரு மொழியாவது பிறமொழியின் கலப்பின்றித் தானாய் வந்ததன்று என்று தெளிக.

"செந்தமிழ்ச் செல்வி" கடகம் 1931