உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

தென்சொற் கட்டுரைகள்

கூகம். மயூரம். கூகை

மயில்

கலை கல் +

சுற்றுரு

+ ஐ. படி அம் = பாடம்.

சூத்ரம். கலி + யாணம்

கலியாணம்.

கலித்தல் = தழைத்தல், யாணம் = புதுமை, புதுவருவாய்.

பழம் – பலம். பழு + அம் அம் = பழம். அடவி - அடர்ந்திருப்பது.

பரி + அம் = பாரம் - பாரி. தரி + அம் = தாரம்.

தருக்கு + அம் = தருக்கம் - மிகுத்துக் காட்டுதல்.

குடி குடில் குடிலம் - குடீரம். சாய் + ஐ = சாயை.

இதம் = - இப்படி. பவளம் – ப்ரவாளம். ப்ரவாளம். நீல் + அம் = நீலம்.

=

இனி, அக்கா, அத்தா, ஆணி, அம்மா, அம்பா, அடவி, ஆளி, கடு, காவேரி, குசம், கூச்சம், குடி, கூன், குளம், கோட்டை, கட்டில், சாம், சா, பட்டணம், பொன், பள்ளி, வெள் முதலியன வடமொழியினின்றும் கால்டுவெல் கண்காணியார் எடுத்துக் காட்டிய தென்சொற்களாம். இன்னும் இவை போன்ற ஆயிரக் கணக்கான தென்சொற்கள் வடமொழிவாய்ப் பட்டுள்ளன.

தமிழரசு தலைதாழ்த்தபின் செந்தமிழாராய்ச்சி சில நூற்றாண்டுகளாக இல்லாமையான், வடமொழிப் புலவர் தமிழரை ஒரு பெட்டை மிரட்டு மிரட்டி வந்தனர். இப்போதோ மொழியாராய்ச்சியால் எண்ணிறந்த வடமொழி வாய்ச்சொற்கள் முடவன் குதிரைகளாய்த் திரும்பி வருகின்றன. சில தமிழர் வடமொழி வாய்ப்பட்ட சொற்களை யறிந்திருந்தும் அவற்றை எடுத்துக் கூறத் துணிந்திலர்.

"மெய்யுடை யொருவன் சொலமாட் டாமையாற் பொய்போ லும்மே பொய்போ லும்மே

வடநூலார் தமிழ்ச்சொற்களைக் கடன்கொண்டபின் அவற்றைத் தமிழ் வடிவில் வைத்திருப்பதில்லை. உடனே உருத் தெரியாது மாற்றி விடுவர். மறைக்காடு, பழமலை போன்ற இடப்பெயர்களைக்கூட வேதாரண்யம், விருத்தாசலம் என்று மொழிபெயர்ப்பாராயின் வேறு என் சொல்வது? இவ்வாறு எத்தனையோ தென்சொற்கள் வடமொழிச் சென்று வாகுகராய் வழங்குகின்றன. அவை நௗராங் காலமும் நண்ணும்.

வடமொழியிலுள்ளதெல்லாம் வடசொற்கள் என்று மொழி நூலுணராதார் சிலர் கொண்டிருக்கின்றனர். மூல முதன்மொழியாகிய தமிழ் தவிர வேறு எந்த மொழியாவது பிறசொற்க ளில்லாததில்லை. ஒரு சொல்லை இன்ன மொழியென்று அறிதற்கு அதன் பகுதிப் பொருளையும் அதனின்றும் திரிந்த பல்வேறு சொற்களையும் பார்க்கவேண்டும். அவை எந்த மொழியிலுள்ளனவோ அந்த மொழிக்கே அது உரியதாம். வினைச் சொல்லாயின் புடைபெயர்ச்சி (Conjugation) வேண்டும். பெயர்ச்