உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடமொழித் தென்சொற்கள்

அரங்குதல் = தேய்தல், அழிதல் (தன்வினை).

=

அரக்குதல் தேய்த்தல், அழித்தல் (பிறவினை).

அரந்தை = துன்பம், அறுப்பதுபோல் துன்பம் செய்வது. அரித்தல் = தேய்த்தல், அறுத்தல், அழித்தல்.

அரம்பம் - இரம்பம். அ - இ, போலி.

இராக்கதன்: இரா +

+ கதம் + + அன் = இராக்கதன்.

31

இரா = இரவு. கதம் = செலவு, கதி - பகுதி. கதித்தல் = செல்லுதல். அன்- விகுதி. இரவில் சென்று உணவு தேடுபவன் இராக்கதன். இராக்கதன்- ராக்ஷஸன். Skt. க்க-க்ஷ.

இராக்கதன் என்பதன் மொழிபெயர்ப்பே நிசாசரன் என்னும் வடசொற்பெயர். நிசி = இரவு, சரன் = செல்பவன்.

இராக்கதன் என்பது முறையே இராக்கன், அரக்கன் என்று திரியும். அரக்கன் என்பதற்கு அழிப்பவன் என்று பொருள் கூறினும்

அமையும்.

இராக்கன், இராக்கி என்னும் பெயர்கள் முறையே ஆண்பாற்கும் பெண்பாற்கும், இன்னும் தென்னாட்டில் சில வகுப்பார்க்குள் இடப்படுகின்றன.

இராக்கதர் பண்டைக்காலத்திலேயே தமிழ்நாட்டி லிருந்ததால், அவரைக் குறிக்கும் பெயரும் தமிழிலிருத்தல் வேண்டும்.

இராசன் : அரசு-அரசன்-ராஜன்.

அரம் = அழித்தல். See அரன், அரம்-அரசு.

அரன் = தெய்வம், சிவன்,

அரசு + அன் = அரசன் = தேவன் போன்றவன்.

அரசு = தலைமை. மரங்கட்குள் தலைமையானது அரசமரம்.

தேக்கு, கருங்காலி முதலியவை உறுதியாயிருப்பினும் அரசுபோல் ஓங்கி வளர்வதில்லை.

"ஆல்போற் படர்ந்து அரசுபோ லோங்கி” என்னும் உலகியல் திருமண வாழ்த்தை நோக்குக.

ஆலமரம் அதிகமாய்ப் அதிகமாய்ப் படரினும், விழுதூன்றியபின் அடி தளர்ந்துபோம். அரசு ஓங்கிவளர்ந்து நெடுநாளிருக்கும். அதனால் பிள்ளையார் கோயில், மணவறை, பட்டஞ்சூட்டு விழாவகம் முதலியவற்றில் அரசங் கன்றையே நடுவர்.

அரசு, பூவரசு என்பன என்பன ஓரின மரங்கள். ரின மரங்கள். மேனாட்டார் இலை வடிவொப்புமை பற்றிச் சில மரங்களை ஓரினமாக்கினாற் போலப் பண்டைத்