உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

விடைத்தல்-பருத்தல்.

தென்சொற் கட்டுரைகள்

விடை என்பது விடபம் என்று திரியும். பம் ஒரு விகுதி.

cf. வாலம்-வாலிபம்.

விடபம் என்பது முதன்மெய் நீங்கி இடபம் என்று நிற்கும்.

cf. சமை-அமை. வளை-அளை.

விடை என்பது விடலை என்றும் திரியும். விடை என்னும் பெயரும் அதன் திரிபுகளும் பல விலங்கிற்கும் பொதுவேனும், சிறப்பாக மாட்டிற் காளங்கன்றையே குறிப்பது நூன்மரபு. தோடுடையசெவியன் விடையேறி. காளை என்னும் பெயர் உவமையாகு பெயராய் ஓர் இளைஞனை அல்லது வீரனை உணர்த்தினாற்போல, அதன் பரியாயப் பெயராகிய விடை என்பதும் அதன் திரிபுகளும் இளைஞரை அல்லது வீரரை உணர்த்தும்.

பாலைமக்களான மறவரின் தலைவன் விடலை எனப்படுவது காண்க. ஓர் இளைஞனை விடலைப்பையன் என்பதும், இளங்கோழிகளைச் சேவல்விடை கோழிவிடை என்பதும் இன்றும் தென்னாட்டு வழக்கு. விடலை என்னும் கன்றுப்பெயர் இலத்தீன் மொழியில் vitula என்று

திரியும்.

இதி, இத்தியாதி: இகரச்சுட்டு பகுதி. வடமொழிக்குச் சுட்டுச் சொல்லேயன்றிச் சுட்டெழுத்தில்லை.

இரத்தம்: அரத்தம்

=

சிவப்பு.

அரத்தம்-அரத்தகம்-அலத்தகம் = செம்பஞ்சுக்குழம்பு.

அரத்தம் என்னும் சொல்லுக்குப் பகுதி வழக்கற்றது.

இதற்கும் இதற்கினமான பிற சொற்கட்கும் அர் அல்லது அரம் என்பது மூலமா யிருக்கின்றது.

=

அரக்கு சிவந்திருப்பது.

அரத்தம் – இரத்தம்.

அ - இ, போலி.

இரத்தி = இலந்தை, சிவந்த கனியை யுடைய செடி. அலத்தகம், இலந்தை என்னும் சொற்களில் லகரம் போலி.

இரத்தி – இலத்தி - இலந்தை. அரத்தம் - ரத்தம், Skt. red, E.

இரம்பம்: அர் ஓர் ஒலிக்குறிப்பு.

அர் அர் என்னும் ஒலிபடத் தேய்த்தல். அராவுதல். அராவுவது அரம். அரம்போல் அறுக்கும் ஆயுதம் அரம்பம்.