உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 39.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இலக்கியம்’, ‘இலக்கணம்’

47

இச் சொற்கள் எல்லாம் ஆங்கிலத்தினின்றும் தமிழுக்கு வந்தவை யல்ல. ஆங்கிலம் வருமுன்னரே இவை தமிழில் உள்ளன. ஆறாயிரம் கல்லிடையிட்ட ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் இத்துணைப் பொதுச் சொற்களிருக்குமாயின், ஏறத்தாழ 5,000 ஆண்டுகளாக அடுத்தடுத்து வழங்கும் வடமொழிக்கும் தென்மொழிக்கும் எத்துணைப் பொதுச் சொற்களிருத்தல் வேண்டும்? இப் பொதுச்சொற்களெல்லாம் மொழி நூன் முறையில் கூர்ந்து நோக்குவார்க்குத் தூய தென்சொற்களென்றே தோன்றா நிற்கும், வடமொழிக்கும் தென்மொழிக்கும் பொதுவாயுள்ள சொற்களை, வடசொல்லென்பாரும் தென் சொல்லென்பாருமாம் இருசாரார் மொழி நூலறிஞர். வடமொழியைப் போன்றே தென்மொழியும் சிறந்ததொரு தாய்மொழியாதலின், வடமொழியினின்றும் தென்மொழிக்கு வந்துள்ள சொற்களைப் போலவே தென்மொழியினின்றும் வடமொழிக்குச் சென்றுள்ள சொற்களும் பன்னூற்றுக்கணக்கின. அவற்றுள் இரண்டு 'இலக்கியம்', 'இலக்கனம்' என்பன.

1. ஆரியர் வடஇந்தியாவிற்கு வருமுன்னரே (B.C. 3000) தமிழில் இலக்கணமிருந்தமைக்கு,

களவினுங் கற்பினுங் கலக்க மில்லாத் தலைவனுந் தலைவியும் பிரிந்த காலைக்

உள்ளுறுத் திறினே யுயர்கழி யானந்தப் பையு ளென்று பழித்தனர் புலவர்”

(யாப்பருங்கலவிருத்தி மேற்கோள்)

என்று அகத்தியம் வழிநூன் முறைமையில் ஆசிரிய வசனங் கூறுவதே சான்றாம். மேலும், எழுத்திலக்கணம், சொல்லிலணக்கம், யாப்பிலக்கண மென்ற மூன்றுமே இலக்கியங் கண்டதற் கிலக்கிய மியம்பலாகத் தமிழ் போலுமொரு செய்யுள் மொழிக்கு முதனூலாசிரியன் தன் நுண்ணறிவால் வகுத்திருத்தல் கூடும். அங்ஙனமின்றி ஏனைமொழிகட் கெல்லாமில்லாத பொருளிலக்கணமும், இசைத் தமிழ் நாடகத் தமிழிலக்கணங்களும், ஆசிரியராகத் தமிழராக ஒருவரே ஒருங்கேயியற்றினர் என்பது எங்ஙன் பொருந்தும்? அகத்தியம் முத்தமிழிலக்கணமன்றே? ஆதலான் முத்தமி ழிலக்கணம் ஒருவரானன்றிப் பலரான் முறையே நெட்டிடை யிட்டிட்டே தோன்றியிருத்தல் வேண்டும்.

அகத்தியர் பொதியஞ் சென்றதும், முருகன்பாற் சுவடி பெற்றதுமான புராணக் கதைகளும் தமிழ்நூலின் தொன்முது பழைமையை உணர்த்துவன வாகும்.

அகத்தியரும் தொல்காப்பியரும் முதனூலாசிரியரைக் குறிக்கு மிடத்து, யாண்டும் பலர்பாலாகவே குறித்துள்ளனர். ஆரியர் வரவிற்கு முன் தமிழிலக்கண மிருந்திருப்பின் அதன் குறியீடுகளும் தமிழிலிருந்திருத்தல் வேண்டும்.